செவ்வாய், அக்டோபர் 15, 2013


உண்ணாவிரதத்தை கைவிட்டார் தியாகு
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த தமிழ்


நய்யாண்டி படத்தில் ஒரு காட்சியை தடை செய்யக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜக பிரமுகர் புகார்
தனுஷ் நடித்து வெளியான நய்யாண்டி படத்தில் ஒரு காட்சியை தடை செய்யக்கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

காதல் தோல்வி? வாலிபருடன் இளம்பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!
கொச்சியில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 5.15 மணிக்கு சென்னை அருகே திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் தலையிட கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நேரடியாக தலையிடுமாறு கோரி பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இன்றும் 33 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றவர்களில் மேலும் 33 பேர் நாடு திரும்பியுள்ளனர். பண்டாரநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகவே அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நாடு திரும்பியுள்ளனர்.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வழிசெய்து தருமாறு வடமாகாண சபையிடம் கோரிக்கை!
போரில் உயிர் நீத்தவர்களுக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கும், அவர்களுடைய உறவினர்களும் உரித்துடையவர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு வடக்கு மாகாண சபை வழி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பாலியல் தொழிலாளிகளை நாடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வுத் தகவல்
இலங்கையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆண்கள் நாள் தோறும் பாலியல் தொழிலாளிகளை நாடுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகளுக்கு உதவியதாக கூறப்பட்டு விளக்க மறியலில் இருந்த தாய்வீடு நிறுவனர் சுவிஸ் பிரசை கருணாகரன்  ,சட்டத்தரணி கே.வி. தவராசாவின் கடும் வாதத்தால் கொழும்பில் விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக சுவிஸ் பிரஜை நடராஜா கருணாகரன் மீது  குற்றம் சாட்டப்பட்டு, சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உலக கிண்ண தகுதி காண் போட்டிகள் 
ஐரோப்பிய வலயத்தில் இருந்து உலகைன்ன போட்டிகளுக்கு தகுதி பெற்ற நாடுகளாக சுவிட்சர்லாந்த் ,இத்தாலி .ஜெர்மனி .ஸ்பெயின் ,ஹோல்லாந்து , இங்கிலாந்த் ,பொஸ்னியா/ஹெர்சகோவினா ,ரஷ்யா ,பெல்ஜியம் ஆகிய ஒன்பது நாடுகளும் தங்களது குழுக்களில் முதலாம் இடத்தை அடைந்து தகுதியை பெற்று விட்டன. ஐரோப்பாவில் இன்னும் நான்கு நாடுகள் தெரிவாக வேண்டும் . ஒவ்வூறு குழுவிலும் இரண்டாம் இடத்தை அடைந்த நாடுகளில் புள்ளி சராசரி வீத கணிப்பின்படி பலவீனமான கடைசி நாட்டை தவிர்த்து மீதமுள்ள எட்டு நாடுகளும் இன்னும் ஒரு ப்ளே ஓப்ஸ் முறை போட்டிகளில் விளையாடும் .வெல்லுகின்ற நான்கு நாடுகள்தகுதியை பெற முடியும் . இந்த வகையில் அடுத்த சுற்றுக்கு விளையாட பிரான்ஸ்,க்ரோசியா , ருமேனியா ,போர்த்துக்கல் ஐஸ்லாந் ,ஸ்வீடன் ,கிரீஸ் ,உக்ரைன் ஆகிய நடுகல் அதிஸ்ட சீட்டிழுப்பின் மூலம் ஜோடிகள் ஆக்கபட்டு இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ளன