செவ்வாய், பிப்ரவரி 03, 2015

உளவுத்துறை எச்சரிக்கையையடுத்து டெல்லியில் காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் உஷார்டெல்லியில் பிரதமர் இல்லம் மற்றும் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் பிப்ரவரி 7ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் இல்லம்  மற்றும் நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்காக தற்கொலைப்படை தீவிரவாதிகள் டெல்லியில் பதுங்கியிருப்பதாகவும் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து டெல்லியில் காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.