வெள்ளி, அக்டோபர் 14, 2016

84 அதிபர்களின் நியமனங்களை இரத்து செய்து தனது அதிகாரத்தை முன் நிறுத்திய முதல்வர்

வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள 84 அதிபர்களின் நியமனங்களை வடக்கு மாகாண முதல
மைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இரத்து செய்துள்ளார்.
வட மாகாண கல்வி அமைச்சின் ஆலோசனைக்கு இணங்கவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர்களுக்காக அண்மையில் இடம்பெற்ற பரீட்சையில் வட மாகாணத்தில் 398 பேர் சித்தியடைந்த போதிலும் 84 பேருக்கே நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறிருக்கையில் பரீட்சையில் சித்தியடைந்த ஏனைய 314 பேரும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தாம் பரீட்சையில் சித்தியடைந்திருந்தும் எங்களுக்கான நியமனம் வழங்கப்படவில்லை என கோரிக்கைவிடுத்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்ததுடன், கல்வி அமைச்சின் நியமனத்தில் முரண்பாடுகள் இடம் பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.