புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2019

இவ்வளவு கேவலமான சமூகத்தில்தான் வாழ்கிறோம்... அபிநந்தன் என்ன ஜாதி என்று கூகுளில் தேடிய 10 லட்சம் பேர்...


சமூகத்தில் யாராவது ஒருவர் பிரபலமாகிவிட்டால் உடனே அவர் நம்ம ஜாதியைச் சேர்ந்தவரா என்று கூகுளில் தேடிக் குதுகலம் அடையும் ஜாதிவெறிக் கும்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தேடலில் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்து நேற்று தாயகம் திரும்பிய தமிழக வீரர் அபிநந்தன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

கூகுள் தேடலில் இன்று அதிகம் பேர் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிற முக்கிய சமாச்சாரமாக ஜாதி அமைந்துவிட்டது. அரசியலில், சினிமாவில், மற்ற துறைகளில் பிரபலமாக உள்ள ஒருவர் நம் ஜாதிக்காரரா அல்லது வேற்று ஜாதிக்காரரா என்று தெரிந்துகொள்வதில் மக்கள் அளவுக்கு அதிகமாக ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார்கள்.
சமீபத்தில் இப்படிப்பட்ட தேடலுக்கு ஆளாகிச் சிக்கி சின்னாபின்னப்பட்டவர் பிக்பாஸ் புகழ் நடிகை ரித்விகா. பிக்பாஸ் போட்டியில் வென்றதால் அவர் பிராமிண் என்று நினைத்தவர்,அடுத்து தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வாய்ப்பளிக்கப்பட்டதால் தலித்தாக இருப்பாரோ என்று குழம்பி 20 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரது ஜாதியைத் தெரிந்துகொள்ள முடியைப் பிய்த்துக்கொண்டு அலைந்தனர். ரித்விகாவும் சளைக்காமல் தொடர்ந்து அப்படித்தேடி வந்தவர்களுக்கு செருப்படி பதில்களாகக் கொடுத்துவந்தார்.

இந்நிலையில் அதே ஆர்வத்தை மக்கள் ராணுவ வீரர் அபிநந்தன் விவகாரத்திலும் காட்டிவருவதாகத் தெரிகிறது. இன்றைய காலை நிலவரப்படி கூகுளில் அபிநந்தனின் ஜாதியை தேடியவர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சத்து அறுபதாயிரத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள பிரபல வானொலித் தொகுப்பாளரும், விரைவில் திரைப்படம் இயக்கவிருப்பவருமான ராஜவேல் நாகராஜன்,...எதிர்பார்த்தது போலவே, அபிநந்தன் வர்த்தமான் என்ன ஜாதி என்ற ஆராய்ச்சியில் ஒரு க்ரூப் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். எனக்கு தெரிந்து இப்படி ஒரு ஜாதி வெறி பிடித்த ஜெனரேஷன் இதற்கு முன் தமிழ்நாட்டில் இருந்திருக்குமா என ஐயமாக இருக்கிறது. சமூகவலைத்தளங்கள் எங்கும் ஜாதி வெறி பிடித்த சைக்கோக்களின் பதிவுகள் நிரம்பி வழிகிறது. குறைந்தபட்சம் அபிநந்தனையாவது இந்தியாவுக்கு பொதுவாய் வைப்போம்! என்று வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

ad

ad