புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2019

காணாமல்போனோர் உயிரிழந்திருக்கலாம்! -ஜனாதிபதி

போர்க்காலத்தில் காணாமல்போனோர் உயிரிழந்திருக்கலாம். எனவே, அப்படியானவர்களுக்கு காணாமல்போனோர் தொடர்பான சான்றிதழ் வழங்குவதே சிறந்ததொரு தீர்வாக இருக்கும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடத்திய சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

" ஒருசமயம் முகமாலையில் 120 சிப்பாய்களின் சடலங்கள் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டன. அவை அழுகிய நிலையில் இருந்தன. இரு தரப்பிலும் இந்த நிலை இருந்தது. போர்க்காலத்தில் வடக்கில் மாத்திரமன்றி தென் பகுதியிலும் பலர் காணாமல்போயிருந்தார்கள். எனவே, போர்க்காலத்தில் காணாமல்போனோர் உயிரிழந்திருக்கலாம்.

எனினும், அதனை அவர்களின் பெற்றோரினால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் என்னால் உணர முடிகின்றது. இதனாலேயே காணாமல்போனோர் உறவினர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே, காணாமல்போனோருக்கான சான்றிதழை வழங்குவதே சிறந்ததாக அமையும்" என்றார்.

ad

ad