புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2019

சிவாஜியும் உள்ளேதள்ளும் முயற்சி:தெற்கு பரபரப்பு

தெற்கில் அரசியல் தலைவர்களை நோக்கி தனது வேட்டையினை ஆரம்பித்துள்ள கோத்தா அடுத்து வடக்கு நோக்கி பார்வையினை திருப்பியுள்ளதாக ஊககங்கள் வெளியாகியுள்ளன.

அவ்வகையில் பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராகவுள்ள கே.சிவாஜிலிங்கத்தை உள்ளே தள்ளும் முயற்சிகள் மும்முரமாகியிரு;பபதாக தெற்கு ஊடக வட்டாரங்கள் பரபரப்பு காட்டியுள்ளன.


இதனிடையே தான் விசாரணைக்கு செல்லும் திகதியை மாற்றிக்கொள்வதாக தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அத்திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

மே மாதம் நடத்தப்பட்ட 'இனப்படுகொலை நினைவு' நிகழ்வு குறித்து சாட்சியம் வழங்குவதற்காக அவரை நாளை (வெள்ளிக்கிழமை) முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இருப்பினும், அவர் இன்று மருத்துவ நடவடிக்கைக்கு செல்லவுள்ளமையினால் ஆஜராக முடியாது என்பதனால் நாளை சனிக்கிழமை ஆஜராவதாக அறிவித்துள்ளார்.

தமிழினப் படுகொலை வாரமாக முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை வருடாவருடம் முன்னெடுத்து வந்தமை தொடர்பாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது

ad

ad