புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2011


யாழ். யுவதியை வல்லுறவுக்குட்படுத்திக் கொலைசெய்த இராணுவத்தினருக்கு மரண தண்டனை
[ புதன்கிழமை, 30 மார்ச் 2011, 02:03.00 PM GMT ]
யாழ். யுவதியொருத்தியை வல்லுறவுக்குட்படுத்திக் கொலைசெய்த மூன்று இராணுவத்தினருக்கு இன்று கொழும்பு நீதிமன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1996ம் ஆண்டில் யாழ்ப்பாணம் கோண்டாவில், உரும்பிராய் பிரதேசத்தைச் சோ்ந்த வேலாயுதன் ரஞ்சனி எனும் 22 வயது யுவதியைக் கடத்திப் போய் வல்லுறவுக்குட்படுத்திக் கொலை செய்த குற்றச்சாட்டிலேயே மூன்று இராணுவத்தினருக்கு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
அவர்களுக்கு எதிராக கடத்தல், வல்லுறவு, படுகொலை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமாஅதிபர் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
யுவதியைப் படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு மரண  தண்டனை விதித்த நீதவான், கடத்தல் மற்றும் வல்லுறவுக்குற்றச்சாட்டுகளுக்கு புறம்பான சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் குற்றவாளிகளுக்கு மேன்முறையீட்டுக்கான சந்தர்ப்பமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

ad

ad