புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2011










ரஜினி சிங்கப்பூர் பயணம்: சிறுநீரக பாதிப்புக்கு நவீன சிகிச்சை

First Published : 27 May 2011 03:02:02 AM IST

Last Updated : 27 May 2011 04:55:58 AM IST
சென்னை, மே 26: சிறுநீரக பாதிப்புக்கு நவீன டயாலிஸிஸ் சிகிச்சைபெற நடிகர் ரஜினிகாந்த் ஓரிரு நாளில் சிங்கப்பூர் செல்ல இருக்கிறார்.
சிறுநீரக பாதிப்புக்கு நவீன சிகிச்சை அளிக்க நடிகர் ரஜினிகாந்தை முதலில் லண்டன் அழைத்துச் செல்ல குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், நீண்ட நேர பயணத்தைத் தவிர்க்க, சென்னையிலிருந்து 4 மணி பயண நேரம் கொண்ட சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர். சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திராவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த்தின் உடல் நிலை, உட்கார்ந்து பயணம் செய்யும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஏப்ரல் 29-ம் தேதி ராணா படப்பிடிப்பு தொடக்க தினத்தன்று நடிகர் ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
மயிலாப்பூரில் தனியார் மருத்துவமனையில் இரண்டு முறை சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சிறுநீரக பாதிப்பு காரணமாக மூச்சுத் திணறல், அதீத உடல் சோர்வு தொடர்ந்ததால், மே 13-ம் தேதி இரவு போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திடீர் முச்சுத் திணறல் காரணமாக மே 18-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதய மருத்துவ நிபுணர் எஸ்.தணிகாசலம் தலைமையிலான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஐந்து முறை ஹீமோ டயாலிஸிஸ் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 22) தனி அறைக்கு மீண்டும் மாற்றப்பட்டார். கடந்த நான்கு நாள்களாக தனி அறையில் நேரத்துக்கு நேரம் சாப்பிட்டு, டி.வி. பார்த்துக் கொண்டு, குடும்பத்தினருடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் பார்வையாளர்களைத் தவிர்க்கவும், மாறுபட்ட சூழ்நிலையில் டயாலிஸிஸ் சிகிச்சையைத் தொடரவும் அவரை "நேஷனல் கிட்னி பவுண்டேஷன் சிங்கப்பூர்' மருத்துவமனையில் சேர்க்க குடும்பத்தினர் முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
சென்னையிலிருந்து அவரை தனி விமானத்தில் அழைத்துச் செல்வதா அல்லது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் அழைத்துச் செல்வதா என குடும்பத்தினர் பரிசீலனை செய்து வருகின்றனர்.


இலங்கை வாழ் தமிழர்களுக்காகவும்.....   :
காவல் துறை இயக்குநருக்கு சீமான் புகார் மனு
தமிழக காவல்துறை இயக்குநருக்கு சீமான் புகார் மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில்,    ‘’நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறேன்.   எங்களுடைய கட்சியின் மாநில 
ஒருங்கிணைப்பாளராக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுபா. முத்துக்குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.   

எங்களுடைய கட்சியானது இலங்கை வாழ் தமிழர்களுக்காகவும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் 
நலனுக்காக போராடி வருகிறது.

கடந்த 15.2.2011 அன்று இரவு சுமார் 9.30 மணியளவில் முத்துக்குமாரும் வழக்கறிஞர் போத்தியப்பன்
அவர்களும் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் உள்ள தாஜ் பழக்கடையில் நின்று கொண்டிருந்த போது மூன்று நபர்கள் சுபா. முத்துக்குமாரை தலையிலும் வயிற்றிலும் வெட்டி கொலை செய்தனர். 

இதில் சம்பவ 
இடத்திலேயே சுபா. முத்துக்குமார் உயிர் இறந்தார்.    மேலும்,  வழக்கறிஞர் போத்தியப்பன் மேற்கண்ட நபர்களால் தாக்கப்பட்டு பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

சுபா. முத்துக்குமார் படுகொலை செய்வதற்கு இரண்டு தினம் முன்பு புதுக்கோட்டையில் உள்ள வடகாடு என்ற கிராமத்தில் சுபா. முத்துக்குமார் மீது அவதூறு பரப்பும் துண்டறிக்கைகள் வீசப்பட்டிருந்தன.   மேலும் அதில் இந்த கருப்பு ஓனாய் வெந்து நொந்து சாவான் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே மேற்கண்ட சுபா. முத்துக்குமாரை கொலை செய்த குற்றவாளிகள் எல்லாம் திட்டமிட்டு இந்த துண்டறிக்கையை வீசியுள்ளனர்.

மேலும்,  இந்த கொலையாளிகளால் பயன்படுத்திய கார் அன்றைய மறுதினம் காரைக்குடி அருகே காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.    

அந்த காரில் இரத்த கரையுடன் இருந்த ஆயுதங்கள் மற்றும் சில தடய பொருட்களை காவல்துறை கைப்பற்றியது.   மேலும்,  அந்த காரில் பதிவாகிய கைரேகை நிபுணர்களால் சேகரிக்கப்பட்டுள்ளது.

16.2.2011 அன்று முதல் தகவல் அறிக்கையை புதுக்கோட்டை நகர காவல் நிலையம் பதிவு செய்து இது நாள் வரை குற்றவாளிகளை பிடிக்கவில்லை. 

இந்த கொலையை நேரில் கண்ட சாட்சிகளான வழக்கறிஞர் போத்தியப்பன் மற்றும் கடையில் இருந்தவர்களை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை.   மேலும்,  சுபா. முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டு 100 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யவில்லை.

மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான எந்தவித முயற்சியும் செய்யவில்லை.     

சுபா. முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டு இது நாள் வரையில் புதுக்கோட்டை காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும் குற்றவாளிகளை கைது செய்யாமலும் இருக்கின்றனர்.

எனவே இவ்வழக்கினை மத்திய அரசின் சிறப்பு புலனாய்வு துறையான சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட்டு உண்மை குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் காலில் விழுந்து நன்றி தெரிவித்த MLA

சேலம் மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.     ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏவாக பொறுப்பேற்று இன்று காலை சேலம் வந்தார். அவர் ஜாகிர்ரெட்டிப்பட்டி பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் ஓட்டு போட்ட வாக்காளர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.

 
பின்னர் ஜி.வெங்கடாஜலம் நன்றி தெரிவித்து பேசும்போது,

’’என்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து இருக்கிறீர்கள். இதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் எது என அறிந்து அவற்றை தீர்த்து வைக்க பாடுபடுவேன்.

பொதுமக்கள் எப்போதும் என்னை எந்த நேரத்திலும் சந்தித்து குறைகளை கூறலாம். இந்த தொகுதி ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பேன்’’ என்று தெரிவித்தார்.

இலங்கையின் புலனாய்வாளர்களால் கண்காணிக்கப்படுகிறார் பாடகர் எஸ்.பி!

E-mailஅச்சிடுகPDF

இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் தென்னிந்தியாவின் பிரபல பாடகர்களில் ஒருவரான எஸ்.பி பாலசுப்பிரமணியமும் இருந்து வருகின்றார் என்று தெரிகின்றது.

இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ' எல்லாளன் ' திரைப்படத்துக்காக பாடி இருக்கின்றார்.

கரும்புலிகளால் அனுராதபுரம் விமானத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சித்திரிக்கும் முழு நீள திரைப்படம் ' எல்லாளன் '.

படத்தின் எழுத்தோட்டத்தில் பாடியவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்று இவரின் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

படத்தில் கவிஞர் புதுவை இரத்தினத்தின் பாடல் வரிகளும், இவரின் குரலும் தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றும் வகையில் உள்ளன என்று புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளா
ர்

இன்டர்போல் பொலிசாரின் தேடப்படுவோர் பட்டியலில் மீண்டும் இணைந்து கொண்டுள்ள கே.பி.
[ வியாழக்கிழமை, 26 மே 2011, 04:15.05 PM GMT ]
இன்டர்போல் பொலிசாரின் தேடப்படுவோர் பட்டியலில் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனின் பெயர் மீ்ண்டும் சோ்க்கப்பட்டுள்ளது.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவத்தை விடுதலைப் புலிகளே திட்டமிட்டு மேற்கொண்டதாக அண்மையில் அவர் வழங்கியிருந்த பேட்டியொன்றே அவர் மீண்டும் இந்தியாவின் நீதிமன்ற தேடப்படுவோர் பட்டியலிலும் அதன் மூலமாக  இன்டர் போல் பொலிசாரின் தேடப்படுவோர் பட்டியலிலும் இடம்பிடிக்க காரணமாக அமைந்துள்ளது.
அதற்கு முன்பு சர்வதேச ஆயுதக்கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் அவரது பெயர் இன்டர்போல் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த போதும் அவர் கைது செய்யப்பட்டதையடுத்து அது நீக்கிக் கொள்ளப்பட்டிருந்தது.
கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைப் புலிகளே கொன்றனர் என்று பரபரப்பான பேட்டியொன்றை இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தியாவின் நீதிமன்ற தேடப்படுவோர் பட்டியலில் விடுதலைப் புலிகளின் முன்னாள் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்டர்போல் பொலிசாரும் தமது பட்டியலில் அவரது பெயரை மீளவும் உள்ளடக்கியுள்ளனர்.

இணையத்தளம் ஊடாக வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைக்கு ஜனாதிபதி அங்கீகாரம்
[ வியாழக்கிழமை, 26 மே 2011, 04:04.17 PM GMT ]
இணையத்தளம் ஊடாக வெளிநாட்டவர்களுக்கு இலங்கைக்கான வீசா வழங்கும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதியளித்துள்ளார்.
 வெளிநாட்டுப் பிரஜைகள் இணையத்தின் ஊடாக நேரடியாக வீசா பெற்றுக் கொள்ளும் யோசனைத் திட்டமொன்றை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் கடந்த ஜனவரி தொடக்கமே குடிவரவுத் திணைக்களம் முன் வைத்திருந்தது. ஆயினும் அதற்கான அனுமதி தற்போதுதான் கிடைக்கப் பெற்றுள்ளது.  
அதன் பிரகாரம் இனிவரும் காலங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யும் மற்றும் இலங்கையின் ஊடாக பயணங்களை மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் இணைய தளத்தின் ஊடாக அதற்கான வீசாக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். 
இணைய வசதி அற்றவர்கள் வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பயண முகவர்களின் ஊடாக வழமையான நடைமுறைகளின் பிரகாரம் தமக்கான விசாவினைப்  பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையமூடான வீசா சேவையை வழங்கும் மென்பொருள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மொரட்டுவைப் பல்கலைக்கழகம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களின் அணிவகுப்பிலிருந்து தமிழ் பொலிசார் விரட்டியடிப்பு
[ வியாழக்கிழமை, 26 மே 2011, 03:58.38 PM GMT ]
யுத்த வெற்றியின் இரண்டாம் வருட நிறைவை முன்னிட்ட கொண்டாட்டங்களின் அணிவகுப்பில் கலந்து கொள்ளவிருந்த தமிழ்ப் பொலிசார் யாழ்ப்பாணத்துக்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தவெற்றியை கொண்டாடும் நிகழ்வில் பொலிஸ் அணிவகுப்பிற்கு தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் அவசியமில்லை என்று கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
யுத்தவெற்றியின் இரண்டாம் வருட பூர்த்தி கொண்டாட்டங்கள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில்  வரலாற்றில் முதற்தடவையாக பொலிஸ் அணிவகுப்பில் தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சேர்த்துக் கொள்ளப்படவிருந்தனர்.
இந்த மரியாதை அணிவகுப்பு நிகழ்வில் சேர்த்துக்கொள்ளும்முகமாக யாழ்ப்பாணத்திலிருந்து 7 தமிழ்ப் பெண் பொலிஸாரும், 16 தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்களும் கடந்த 15 ஆம் திகதி கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு, பொலிஸ் பயிற்சி கல்லூரியில் தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டதுடன், காலி முகத்திடலில் அணிவகுப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டிருந்தன.
அதற்கிடையே கொழும்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்கவின் அவசர உத்தரவுக்கமைய 23 தமிழ் பொலிஸாரையும் யாழ்ப்பாணத்திற்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறு நேற்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்களின் அணிவகுப்பு மரியாதைக்கான நடையில் போதுமான திருப்தியின்மை காணப்படுவதாகவும் அதன் காரணமாக தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மரியாதை அணிவகுப்பிற்கு அவசியமில்லை என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆயினும் தாம் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே பாகுபாடு காட்டப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளோம் என்று கொழும்பிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்கள்  கவலை தெரிவித்துள்ளனர்.

பொஸ்னிய யுத்தக்குற்றவாளி ரட்கோ மிலாட்விஜ் கைது செய்யப்பட்டு சர்வதேச நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்
[ வியாழக்கிழமை, 26 மே 2011, 03:04.27 PM GMT ]
பொஸ்னியாவில் அல்பேனிய இனத்தவரான சேபியர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொஸ்னியர்களைக் கொலைசெய்த ரட்கோ மிலாட்விஜ் எனும் முன்னாள் இராணுவத் தளபதி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
1991ம் ஆண்டு முதல் ரட்கோ மிலாட்விஜ் மீது இன அழிப்புக் குற்றமும், போர் குற்றங்களும் சுமத்தப்பட்டிருந்தது. 20 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட பொஸ்னியர்கள் இவரைக் கைதுசெய்யவேண்டுமென்று பலமான கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் பின்னர் ஏனைய நாடுகளும் செபனீசியாவில் ரட்கோ மிலாட்விஜ் இனால் இழைக்கப்பட்ட இன அழிப்புக் கொடுமைகளை உண்மையென்று ஏற்றுக்கொண்டது. அதன் காரணமாக சர்வதேசமெங்கும் கடந்த 20 வருடமாக இவர் தேடப்பட்டு வந்தார். அமெரிக்காவின் புலனாய்வைப் பிரிவினரும் தமது உச்சகட்ட ஆற்றலைப் பயன்படுத்தி அவரைத் தேடும் பணிகளை முடுக்கி விட்டிருந்தனர். ஆயினும் இன்றுவரை ரட்கோ மிலாட்விஜ் தலைமறைவாகவே வாழ்ந்து வந்திருந்தார்.
அவ்வாறான நிலையில் இன்று சேர்பியாவிலுள்ள கிராமம் ஒன்றில் மறைந்திருந்த அவரை சேர்பியப் பொலிசார் கைதுசெய்துள்ளனர். தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள ரட்கோ மிலாடிஜ் மீது மரபணுப்பரிசோதனை நடத்தப்படுவதாவும், உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவர் நேரடியாக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

ad

ad