புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2012


பிரபாகரனை விமர்சித்து என்.கே.கே.பி. ராஜா பேச்சு! தமக்கு உடன்பாடில்லை என்கிறது தி.மு.க
பிரபாகரன் ஈழத் தமிழர்களைக் கொன்ற ஒரு கொலைகாரன் என்ற கருத்துப்பட பேசியதாக இதழ் ஒன்றில் வெளியான தகவலை மறுத்துள்ள திமுக., அவரின் இந்தப் பேச்சில் திமுகவுக்கு உடன்பாடில்லை என்று கூறியுள்ளது. 
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளர் என்.கே.கே.பி.ராஜாவும் - தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் வி.பி.ராஜனும், ஈரோடு நகரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டத்தில், இலங்கைப் பிரச்சினை தொடர்பாகப் பேசியதாக, ஜூனியர் விகடனில் வெளியான கருத்துக்களுக்கு தி.மு.க.தலைமைக் கழகத்திற்கு உடன்பாடு இல்லை. இது பற்றி அவர்கள் இருவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, என்.கே.கே.பி ராஜா பேசியதாக ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் 
 ராஜீவ் காந்தியைக் கொடூரமாகக் கொன்றார்கள் விடுதலைப் புலிகள். இளம் தலைவர் ராஜீவ் காந்தியை நாம் இழந்தோம். பல குழுக்களாக இருந்த போராளி அமைப்புகளை ஒன்றாக இருக்கச் சொன்னார் கலைஞர். ஆனால், பிரபாகரன் அதைக் கேட்கவில்லை.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஆட்சியை மட்டும் நாம் இழக்கவில்லை. எத்தனையோ தி.மு.க-வினர் வீடு எரிக்கப்பட்டது. ஈழத்துக்காகப் போராடிய மற்ற அமைப்புகளின் தலைவர்களை பிரபாகரன் கொன்றார். ஈழத்தை, தான் மட்டும் ஆள வேண்டும் என்ற சுயநலம் பிரபாகரனுக்கு.
பழ.நெடுமாறன் எதற்கெடுத்தாலும் ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு ஈழத்துக்குப் போவேன் என்று கூறுவார். ஆனால் போக மாட்டார். தைரியம் இருந்தால் ஈழத்துக்குப் போய் பிரபாகரனோடு சேர்ந்து போராட வேண்டியதுதானே?
வைகோ, திருட்டு தோணி ஏறிப் போனார். ராஜபக்சவைவிட அதிக தமிழர்களைக் கொன்றவர் பிரபாகரன். ராஜபக்ச, பிரபாகரனைக் கொன்றது கரெக்ட்'' என்று முடித்தார் என்.கே.கே.பி ராஜா.
இவ்வாறு முன்னர் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ad

ad