புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2012


டெசோ மாநாட்டில் கி.வீரமணி, சுப.வீ. பேச்சு
சென்னையில் நேற்று நடந்த `டெசோ' மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியபோது,
’’ராம்விலாஸ் பஸ்வான் போன்ற சக்தி வாய்ந்த தலைவர்களை ஒன்று திரட்டி
கருணாநிதி தொடக்கியுள்ள `டெசோ' மாநாட்டை வெற்றிகரமாக தொடக்கியுள்ளோம்.

இங்கே பேசியவர்கள் காவல்துறை யாரும் இங்கே இல்லை என்று வருத்தப்பட்டனர். தமிழக மக்களின் காவல் தலைவராக கருணாநிதியும், காவலராக நாமும் இருக்கும்போது இங்கு காவலர்கள் தேவையில்லை.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இதற்கு முன்பாக ஈழப் பிரச்சினையில் உலகத்தின் பார்வையை திருப்பவேண்டும். ஈழப் பிரச்சினையில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் தான் தனி ஈழம் பிறக்கும்’’என்று குறிப்பிட்டார்.
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசியபோது,  ’’2009-ல் இலங்கையில் நடந்த போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இப்போது நாம் 3-ம் கட்ட போராட்டத்தில் களத்தையும், யுக்தியையும் மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
அதன் தொடக்கம்தான் இந்த மாநாடு. இலங்கையில் நடப்பது தமிழ் ஈழப் பிரச்சினை இல்லை. அது மனித உரிமை சிக்கலாகும். இதனை உலக கவனத்துக்கு கொண்டு சென்றால்தான், நாம் அடுத்த கட்டத்துக்கு செல்லமுடியும்.

தமிழ் ஈழப் பிரச்சினையை உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வது கருணாநிதியால்தான் முடியும். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐக்கிய நாட்டு சபையில் உள்ள ஜெனீவாவுக்கு கருணாநிதி நேரில் கொண்டுபோய் கொடுக்க வேண்டும்’’என்று கூறினார்.


ad

ad