புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2012


புலம் பெயர்ந்த தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணி தொடங்கியது என்கிறது இலங்கை அரசு 
இலங்கையில் போர் முடிவடைந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு, முதன்முறையாக, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணிகளை சிங்கள அரசு தொடங்கி உள்ளது.


அந்த பகுதிகளில் முதல்கட்டமாக மாணிக் பண்ணை முகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 380 குடும்பங்களைச் சேர்ந்த 1,204 பேர் மீண்டும் குடியமர்த்தப் படுகின்றனர்.

இதில், கிழக்கு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று 206 குடும்பங்களைச் சேர்ந்த 636 பேர் மறுகுடியமர்த்தப்பட்டு உள்ளனர். அதேபோன்று, முல்லைத்தீவு பகுதியில், நாளை (திங்கட்கிழமை) 174 குடும்பங்களைச் சேர்ந்த 569 பேர் மறுகுடியமர்த்தப்பட உள்ளதாக இலங்கையின் மறுகுடியமர்த்துதல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ad

ad