புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2012


அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு
மன்னார் நீதவான் ஏ.ஜுட்சனை அச்சுறுத்திய வழக்கு தொடர்பாக இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையொன்றில், அமைச்சர் ரிசாத் பதியுதீனை வரும் 27 ம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு பாணந்துறை நீதவான் திசாநாயக்க அவர்களினால் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின்போது அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் மன்னார் நீதவான் ஏ.ஜுட்சன் நீதவான் திசாநாயக்க முன்னிலையில் தோன்றி சாட்சியமளித்தார்.
தன்னை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களே தொலைபேசியில் தொடர்புகொண்டு அச்சுறுத்தியதாகவும், அவரது குரல் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், இதற்கு முன்பும் அவர் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார் என்பதால் அவரது குரலை நன்கு அடையாளம் காணக்கூடியதாக இருந்ததாகவும் நீதவான் ஜுட்சன் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரண்டாம் முறையாக அமைச்சர் தன்னை அச்சுறுத்தியபோது, அவர் பேசியதை அந்த நேரம் தனது அருகில் இருந்த சட்டத்தரணிகள் சிலர் கேட்கும்படி செய்ததாகவும் குறிப்பிட்டார்.
இந்த வழக்கை விசாரணை செய்த சிஐடியினர் சாட்சியமளிக்கையில் அமைசசர் ரிசாத் பதியுதீன், அவரது சகோதரர், மன்னார் நீதவான் ஜுட்சன் ஆகியோரின் வாக்குமூலங்களைத் தாங்கள் பதிவு செய்திருப்பதாகவும், தமது விசாரணைகளின் மூலம் அமைச்சருடைய சகோதரரே நீதவானுடன் தொலைபேசியில் பேசியதாகத் தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
சிஐடியினர் நீதிமன்றத்திற்கு கையளித்துள்ள விசாரணைகள் தொடர்பான அறிக்கையில் எவரையும் பெயர் குறிப்பிட்டு சந்தேக நபராகக் குறிப்பிடாமல் இருந்ததை சுட்டிக்காட்டிய நீதவான் திசாநாயக்க அவர்கள், ஒரு விசாரணை அறிக்கையில் சந்தேக நபர் எவரையும் பெயர் குறித்து குறிப்பிடாமல் எவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அச்சுறுத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசியின் உரிமையாளர் யார் என்பது தெரிந்த பின்பும் ஏன் சந்தேக நபராக எவரையும் அறிக்கையில் சிஐடியினர் குறிப்பிடவில்லை என்றும் நீதவான் கேள்வி எழுப்பினார்.
பின்னர் எதிர்வரும் 27 ம் திகதி அமைச்சர் ரிசாத் பதியுதீனை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் நீதவான் ஜுட்சன் தரப்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உபதலைவர் கமகே, செயலாளர் அனோமா மற்றும் சிலர் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய சட்டத்தரணிகள் குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
எதிர்த்தரப்பினருக்காக சட்டத்தரணி சகீர் ஆஜராகியிருந்தார்.
மன்னார் நீதிமன்றத்தின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய தாக்குதல் நடத்திய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.
ஆயினும் மன்னார் சட்டத்தரணிகளான நேரில் கண்ட சாட்சிகள் பெயர் குறிப்பிட்டு தெரிவித்திருந்த 27 பேரும் தலைமறைவாகியிருப்பதனால் அவர்களைத் தங்களால் கைது செய்ய முடியவில்லை எனக் கூறிய பொலிசார், அவர்களைக் கைது செய்வதற்காக நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டிருந்த உத்தரவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்படடுள்ள 13 பேரையும் பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் செய்யப்பட்ட வாய்மொழி மூலமான பிணை விண்ணப்பத்தையடுத்து, எழுத்து மூலமாக விண்ணப்பம் செய்யுமாறு கூறிய நீதவான் திசாநாயக்க அவர்கள், இந்த வழக்கு தொடர்பில் தேடப்படுகின்ற 27 பேரையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என பொலிசாருக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

ad

ad