புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2012


இலங்கைத் தேசியக் கொடியை காண்பித்தமைக்கு லண்டன் HSBC வங்கி மன்னிப்புக் கோரியது
இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடத்தப்பட்ட போரை இலங்கையின் தேசியக் கொடி நினைவு படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள HSBC  வங்கிக் கிளையானது, இலங்கையின் கொடியைக் காட்டியதற்கு தமிழர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.

லண்டனில், HSBC வங்கிக் கிளையில் வேலை செய்யும் உறுப்பினர்களுக்கு ஒலிம்பிக்கில் 4 நாட்டின் தேசியக் கொடியைக் காண்பிப்பதற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையின் தேசியக் கொடியைக் காண்பிக்கும் போது, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், சித்திரவதைகள், பெண்களுக்கு ஏற்பட்ட வன்முறைகள் எல்லாம் கோபத்தை வரவழைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ் கலாசார நிறுவனத்தினைச் சேர்ந்த கே. இளங்கோவன் தெரிவிக்கையில்,
இலங்கைத் தேசியக் கொடியை காண்பிப்பது அங்கு ஒரு பகுதியாகவே இருந்தது. தமிழ் மக்களை கஸ்டப்படுத்துவது நோக்கமாக இல்லை என தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் காட்டப்பட்ட இக்கொடியானது பிரித்தானியக் கொடிக்கு பின்னால் இருப்பதால், பிரித்தானியா நம்மை வழிநடத்துகின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எனினும், இலங்கைத் தேசியக் கொடி தொடர்பாக பல முறைப்பாடுகள் வந்ததற்குப் பின்னர் அந்த கொடியை கழற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பில் யோகன் யோகானந்தன் தெரிவிக்கையில்,
HSBC வங்கியில் 44 வருடமாக வாடிக்கையாளராக இருக்கின்றேன். HSBC வங்கியின் ஊழியர்கள், தமிழ் மக்களின் இன்னும் வலியை உணர்ந்துகொண்டுள்ளனர். HSBC வங்கியானது தமிழ் மக்களுக்கு உதவி செய்யத்தான் நினைக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
HSBC வங்கிப் பேச்சாளர் தெரிவிக்கையில்,
கொடியை நல்ல நோக்கதத்திற்காகத் தான் வைத்தோம். இப்படி கஸ்டப்படுத்தும் என்று நினைக்கவில்லை. இதக்காகவே வங்கி மன்னிப்பு கோரியது என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட முதலாவது வெளிநாட்டு வங்கி HSBC ஆகும். தற்போது இலங்கை முழுதிலும் 16 வங்கிக் கிளைகள் உள்ளன.

ad

ad