புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2012


மு.கா.சுயதேவைகளைப் பூர்த்தி செய்யமக்கள் ஆணையைத் துச்சமென மதித்து விட்டது: சம்பந்தன்
துணிச்சலாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதற்கான ஜனநாயக ரீதியான பலமான ஒரு நிலையை கிழக்கு தேர்தலில் மக்கள் ஏற்படுத்தி தந்திருந்த போதிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மக்களின் ஆணையை துச்சமாக மதித்து அரசுடன்
இணைந்து ஆட்சி அமைத்துள்ளது ௭ன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ௭ம்.பி தெரிவித்தார். 
 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் தலைமைப் பதவியில் இன்று இருந்திருந்தால் மக்கள் ஆணையை மதித்து தமிழ் முஸ்லிம் மக்களுடைய உணர்வுகளை மதித்து ௭வருக்கும் அடி பணியாமல் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கில் ஒரு நல்லாட்சியினை ஏற்படுத்தியிருப்பார்.

கிழக்கு மாகாணத்தில் நடந்து முடிந்துள்ள மாகாண சபைத் தேர்தலில் மக்கள் தெளிவான ஆணையை வழங்கியிருக்கின்றார்கள். அரசாங்கத்துக்கு ௭திராக தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம்

காங்கிரஸ், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆகிய மூன்று கட்சிகளுக்கும் 22 ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள். ஆனால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் அதன் பங்காளிக்கட்சியான தேசிய சுதந்திர முன்னணிக்கும் மொத்தமாக 13 ஆசனங்களையே மக்கள் பெற்றுக் கொடுத்துள்ளார்கள். ௭னவே ஜனநாயக ரீதியாக கிழக்கு மாகாணத்தில் ஆட்சிப்பொறுப்பை ௭ந்தத் தரப்பினர் பொறுப்பேற்றிருக்க வேண்டுமென்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்

ad

ad