புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2012


அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் முரண்பாடு
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கடந்த 24 ஆம் திகதி இரவு கொழும்பிலிருந்து புறப்படவிருந்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  விடுத்த பணிப்பினையடுத்து தனது பயணத்தினை ரத்துச் செய்துள்ளார்.
இருப்பினும் இவரது சீன விஜய குழுவில் இடம்பெற்றிருந்த ஏனையோர் திட்டமிட்டபடி குறித்த தினத்தில் சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். என நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 24 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராக நிலையில் அன்றிரவே இவர் சீனா செல்லத் திட்டமிட்டிருந்தார்.

இது இவ்வாறிருக்க, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றவருமான அமீர் அலியைத் தேசியப் பட்டியல் ஊடாக இலங்கை பாராளுமன்றத்துக்குள் உள்ளீர்ப்பது என்ற திட்டத்தை ஜனாதிபதி தற்போது தற்காலிமாகக் கைவிட்டுள்ளார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மாலினி பொன்சேகா ஜனாதிபதியின் வேண்டுகோளின்படியே ராஜினாமாச் செய்திருந்ததாகவும், அவரின்  வெற்றிடத்துக்கே அமீர் அலி நியமிக்கப்படவிருந்தார் என்றும் அந்த வட்டாரங்கள் எமக்குத் தெரிவித்தன.

எனினும் ரிஷாத் பதியுதீனுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து ஜனாதிபதி தனது முடிவை மாற்றிக்கொண்டதுடன், மாலினி பொன்சேகாவே மீண்டும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணஞ் செய்யவுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

ad

ad