-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

12 அக்., 2012


ம.தி.மு.க.,விலிருந்து வெளியேறுகிறாரா நாஞ்சில் சம்பத்? முடிவு குறித்து அறிய வைகோ காத்திருப்பு!

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவுடனான கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியிலிருந்துவெளியேற, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தி.மு.க.,விலிருந்து வைகோ வெளியேறிய போது, அவருடன் சேர்ந்து நாஞ்சில் சம்பத்தும் வெளியேறினார். தற்போது ம.தி.மு.க.,வின் கொள்கை பரப்புச் செயலாளராக பதவி வகித்து வரும் நாஞ்சில் சம்பத் மீது வைகோவிற்கு அளவு கடந்த பாசம் என அக்கட்சியினர் சிலாகித்து சொல்வதுண்டு. 

இந்நிலையில், இருவருக்கும் இடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன. சமீபத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்தியா வந்த போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி சென்று போராட்டங்களை நடத்தினார் வைகோ. இப்போராட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொள்ளவில்லை.
இவ்விவகாரம் தற்போது இருவருக்குமிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி, சம்பத் கட்சியை விட்டு வெளியேறும் நிலைக்கு கொண்டு சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை வைகோவும் உணர்ந்துள்ளார்.

இதனிடையே மதிமுக கட்சிக்குள் நடக்கும் இந்த விஷயத்தை அறிந்த அதிமுக, திமுக இருகட்சிகளும் நாஞ்சில் சம்பத்தை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளன.
எனினும் தான் கட்சியிலிருந்து வெளியேறும்பட்சத்தில், தனது எதிர்காலம் என்ன என்பது குறித்து நாஞ்சில் சம்பத் ஆலோசித்து வருவதாகவும், நாஞ்சில் சம்பத்தின் முடிவு குறித்து அறிந்து கொள்ள வைகோ காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கட்சியின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்குமாறு வைகோவையும், நாஞ்சில் சம்பத்தையும் கட்சியின் மாநில நிர்வாகிகள் சிலர் சாமாதானம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விளம்பரம்