புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2012

"மதுரை அகதி முகாம்களில் கவனிப்பாரற்ற நிலையில் வாழும் இலங்கை அகதிகள்"
தமிழ்நாட்டின் மதுரை அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் கவனிப்பாரற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.அகதி முகாம்

களில் வாழ்ந்து வரும் மக்கள் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் அவதியுறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1983ம் ஆண்டு ஜூலை இனக்கலவரத்தைத் தொடர்ந்து அதிகளவான இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்கு சென்றனர். இவ்வாறு சென்றவர்களில் பலர் தமிழகத்தின் பல்வேறு அகதி முகாம்களில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்.

இவ்வாறு அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு மாநில அரசாங்கம் உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மாறாக அகதி முகாம்களில் வாழ்வோருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாகவும், உதாசீனமான போக்கைப் பின்பற்றி வருவதாகவும் தி ஹிந்து குற்றம் சுமத்தியுள்ளது.

1983ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சில முகாம்களில் மக்கள் தொடர்ந்தும் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது. மழை காலங்களில் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ad

ad