கிளிநொச்சி பகுதியில் தாய் ஒருவர் தனது 5 வயதுடைய ஆண் பிள்ளையுடன் குளத்தில் குதித்து மரணமடைந்துள்ளார். குஞ்சுப்பரந்தன் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சுகுமார் நிசாந்தினி என்ற பெண்ணே தனது பிள்ளையை அணைத்தபடி வீட்டுக்கு அருகில் இருந்த குளத்தில் குதித்து உயிரிழந்துள்ளார். குறித்த இருவரும் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.