புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2013





        வியாசமுனி வந்து தங்கிய நினைவால் அவர் பெயரைத் தாங்கி நிற்கும் வியாசர்பாடி. இந்த ஏரியாவை முன்பு ஆட்டிப்படைத்தவர்கள் தாதாக்களான வெள்ளை ரவியும், சேராவும்தான்.

காலவோட்டத்தில் வெள்ளை ரவி போலீஸ் குண்டில் உயிர்விட... "சேரா' மட்டும் இன்றுவரை சிக்காமல் தலைமறைவு ராஜ்ஜியத்தை கன்டினியூ செய்து வருகிறார்.-நக்கீரன் 

இவர்களின் வழித்தோன்றல்களான பொக்கை ரவி, காக்கா தோப்பு பாலாஜி, பப்லு ஒரு டீமாகவும், வெள்ளை ரவி காலத்திலிருந்தே ரவுடியிச ஃபீல் டில் இருந்துவரும் "நாகேந்திரன்' ஒரு டீமாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இவர்களிலிருந்து பல்வேறு கிளைகளாய் வீதிக்கு வீதி குத்தகை எடுத்துக் கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 215 ஆகும். இவர் களில்...

 ஒன்றரை ஆண்டு கால இடைவெளியில் மட்டும் கலை யரசன், பாட்டில் மணி, ரஞ்சித் குமார், காமேஷ் என்று பதினெட்டு "பார்டர் தல' "தாதா'க்கள் கதை முடிக்கப்பட்டிருக்கிறது. இதில் காமேஷ் கதை 5-1-2013 அன்றும் இதன் தொடர்ச்சியாக 7-1-2013 அன்று "பார்டர் தல'யான பிரபா (எ) பிரபாகரன் கதையும் அடுத்தடுத்து முடிய... விக்கித்துப் போய் நிற்கிறார்கள் வியாசை மக்கள். எப்படி நடந்தது இந்த திகில் உற்சவம்?

ஜனவரி 1. 215- "பார்டர் தல' தாதாக்கள், ஏரியாவில் உள்ள சுடுகாட்டில் கூடுகிறார்கள். தங்க ளுடன் இருந்து வீரமாய்(!?) உயிர் விட்ட "பார்டர் தல' சமாதிகளின் மீது மதுவை ஊற்றி, பிரியாணி பொட்டலங்களை பரப்பி, சூடமேற்றி காமேஷை முடிப்பதாக சத்தியம் செய்கிறார்கள்.

அதன்படி... இரவு 11 மணி. வீட்டிற்குள் நுழைந்ததுமே காமேசுக்கு வருகிறது செல்பேசியில் அழைப்பு. மறுமுனையில் மனதைக் கவர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரின் குரல்...

"வீட்ல எல்லாம் வெளில போயிருக்காங்க. தனியாத்தான் இருப்பேன். சரியா?' என்றது ஆசையாய்.அடுத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே சுற்றுமுற்றும் ஒரு பார்வையை எச்சரிக்கையாய் வீசிவிட்டு "ஸ்லம்' குடியிருப்பு மாடிப் படியேறி மாணவியின் வீட்டுக் கதவருகே சென்று மாணவியின் செல்போனுக்கு டயல் செய்தார் காமேஷ். போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டிருந்தது. 

ஏதோ விபரீதம் என உணர்ந்த காமேஷ், படிக் கட்டுகளில் இறங்கி ஓட... அந்த இருட்டில் பின்பக்கமாய் இருந்து பாய்ந்த கத்தி கொடுத்தது முதல் வெட்டு. பின் கழுத்தும், முதுகும் சந்திக்கும் இணைப்பு பாளமாய் பிளக்க, அதே இடத்தில் விழுந்தது அடுத்த வெட்டு, தொடர்ந்து 12 கத்திகள் "பார்டர் தல' நபர்கள் 6 பேர் கையில் இருந்து பாய... சில நிமிடங்களில் கத்தக் கூட முடியாமல் முடிந்தது காமேஷ் வாழ்க்கை. மறுநாள் குண்டு (எ) பாடி சரவணன், கோபி ஆகியோர் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் சரணடைந்தனர். பல "பார்டர் தல'கள் தலைமறைவில் இருக்கின்றனர்.

அந்த மாணவியையும் அவர் உறவினர் களையும் சேஸ் செய்வதில் நிறைய நேரம் பிடித்தது. அவர்களிடம் பேசியதிலிருந்து, ""காமேஷ் மேல எங்க புள்ளே ஆசை, கீசைப் படலிங்க... அவனுக்கு 40 வயசுக்கு மேல இருக்கும். இவ மேல அவனுக்கு எப்பவுமே ஒரு கண்ணு. ஸ்கூலுக்குப் போவும்போது வழில மடக்கியாந்து கலாட்டால்லாம் பண்ணியிருக் கான். நாயம் கேக்கப் போன அண்ணன் காரங்களை அடிச்சு அமிச்சிட்டான். இதே மாதிரி ரொம்ப வாட்டி நடந்திருக்கிது. இதை அந்த குரூப் ஆளுங்க பாத்துக்குனு அத்தையே மன்சுல வெச்சிக்கினு இப்பிடி பிளான் பண்ணிட்டானுங்க.

"அழாம கொள்ளாம நம்பறா மாதிரி பேசி அவனை இங்க இஸ்துகுனு வர வெய்யி... இல்லா காட்டி உன் வூட்ல ஒரு உசுரு நிக் காது'ன்னு கத்தி யை வெச்சு சொல்லாகாட்டி எங்க புள்ள இப்டி பண்ணுமா?''என்று "திகில்' விலகாமல் நம்மிடம் பேசினர்.

காமேஷ் கதை இப்படி முடிந்திருக்க... மிக சமீப காலமாய் "பார்டர் தல' ஃபார்முக்கு வந்திருக்கும் பிரபா (எ) பிரபாகரனும் இரண்டு நாள் இடைவெளி கூட இல்லாமல் 7-ந்தேதி காலை 11 மணிக்கு 6-ம் நெம்பர் டாஸ்மாக் கடை வாசலில் வரவழைத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

மிக மிக வேண்டிய உறவினர் ஒருவரின் மகனும் நெருங்கிய நண்பனுமானவரின் "குரலாய்' மிமிக்ரி மூலம் மதுவருந்த அழைப்பு கொடுத்து முடிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டாலும்... காமேஷ் ஸ்டைலில்தான் மாணவி ஒருவர் மூலம் வரவழைக் கப்பட்டு பிரபாவின் கதை முடிக்கப்பட்டது என்கின்றனர் ஏரியாக்காரர்கள். தொடர் கொலைகள் பற்றி ஒரு சிறு வரலாற்றை விவரித்தனர் பொது மக்கள்.

""ரஞ்சித்துங்கறவரை கொல பண்ண கேசுல காமேசை புடிச்சு மிசா அடிச்சிட்டாங்க. ரஞ்சித்து "பொக்கை' ரவியோட ஆளு... இதனால பொக்கை ரவி பசங்க காமேசை போட்டானுங்க. பொக்கை ரவியோட சொந்தக்காரப் பொண்ணுதான் அந்த ஸ்கூல்ல படிக்கற பொண்ணு. அதுக்கு காமேஷ் ரொம்ப தொல்ல குடுத்துக்கினுயிருந்தான். அதான் சரியா "செட்' பண்ணி போட்டாங்க. இந்த காமேசு யாருன்னா வேலூர் ஜெயில்லயிருக்கிற நாகேந்திரன்கற "பெரிய தல'யோட பினாமி.

ரஞ்சித்துக்கு "தல' பொக்கை ரவி. பொக்கைக்கு "தல' காக்காதோப்பு பாலாஜி... மச்சான் முறை ஒறவு. இதனாலதான் "பொக்கை'யோட ஆளான "பிரபா'வை 7-ந்தேதி "மட்டை' (கொலை) பண்ணாங்க.

பிரபா பெரியாளெல்லாம் இல்லே... ஆனா காமேஷ் பேஜாரான ஆளு. மதுரை, திருச்சி, சேலம்னு சும்மா அறுவது, எழுவது கேசுக்காரன் தெரியுமா?'' என்றனர் டீடெய்லாக.

தொடர் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா காவல்துறை?

-ந.பா.சேதுராமன்

ad

ad