புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2013


மட்டக்களப்பில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லங்காசிறி தமிழ்வின் இணையத்தளம் உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேசத்தில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மகிழடித்தீவு, மகிழடித்தீவு தெற்கு கிராம அதிகாரி பிரிவு மக்களுக்கு தமிழ்வின் மற்றும் லங்காசிறி இணையத்தளம் ஆகியவை உதவிப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் ஊடாக வழங்கி வைத்துள்ளது.
இதனடிப்படையில் மகிழடித்தீவு கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 125 குடும்பங்களும், மகிழடித்தீவு தெற்கு கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 125 குடும்பங்களுக்கும் இவ் உதவி வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்துக்கு ஆயிரம் ரூபா வீதம் உதவிப் பொருட்கள் இன்று கையளிக்கப்பட்டன.
ஒரு குடும்பத்துக்கு இரண்டு பாய், ஒரு வெற்சீற், ஒரு அங்கர் பால்மா, மூன்று சவர்க்காரம் என்ற வகையில் பொருட்கள் வழங்கப்பட்டது. 250 குடும்பங்களுக்கும் ஒரு குடும்பத்துக்கு ஆயிரம் ரூபா பெறுமதியான பொருள் வினியோகிப்பதன் அடிப்படையில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பொருட்கள் வழங்கப்பட்டது.
இவ் உதவிகள் மகிழடித்தீவு கிராம அதிகாரி அலுவலகத்திலும், மகிழடித்தீவு தெற்கு கிராம அதிகாரி அலுவலகத்திலும் வைத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் ஆகியோரால் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் அனர்த்த சேவைகள் நிவாரணக் குழுவினர்களான கி.ரவீந்திரராசா, ந.குகதர்சன், பு.பிரணவன், த.சந்திரகுமார், ம.சூரியகுமார் மற்றும் பல பிரதிநிதிகளும், மகிழடித்தீவு, மகிழடித்தீவு தெற்கு கிராம அதிகாரியும் கலந்து கொண்டனர்.
இவ்உதவியை வழங்கிய தமிழ்வின், லங்காசிறி ஆகிய இணையத்தளங்களுக்கு மகிழடித்தீவு, மகிழடித்தீவு தெற்கு கிராம மக்களும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் நன்றிகளை தெரிவிக்கின்றது.

ad

ad