புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2013




          ""ஹலோ தலைவரே... 2013ஆம் வருடத்தை தமிழக மக்கள் ரொம்ப நம்பிக்கையோடு எதிர்பார்த்துக்கிட்டி ருக்காங்க. ஏன்னா, 2012 ரொம்ப சோதனையா அமைஞ்சிடிச்சி.''thx nakeeran

""ஆமாப்பா.. 18 மணி நேர கரண்ட் கட்டை தமிழகம் இதுவரைக்கும் சந்திச்ச தில்லை. பகலிலேயே இருண்டு போயிடிச்சி. பருவமழையே இல்லை. அதனால விவ சாயிகள் தற்கொலை. பவர்கட்டால் தொழில்களும் பாதிச்சிடிச்சி. டெங்கு காய்ச்சலால் பல மரணங்கள். அதைக் கட்டுப்படுத்தாமல், மர்மக் காய்ச்சல்னு அரசாங்கம் சொல்லிக்கிட்டிருந்திச்சி. எல்லாத் தரப்பையும் வாட்டி வதைத்த 2012 முடிந்து 2013ஆம் வருடம் பிறப்பதை மக்கள் ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்துக்கிட்டி ருக்காங்க.''

""அரசியல் வட்டாரத்திலும் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்குங்க தலைவரே… டெல்லியிலிருக்கும் தி.மு.க எம்.பி.க்கள் தங்களோட தலைமைக்கு சொல்லியிருக்கிற தகவல் என்ன தெரியுங்களா.. பார்லிமெண்ட் தேர்தல் சீக்கிரமாவே வந்துவிடும். அநேகமா 2013ஆம் வருசம் மே மாசமே தேர்தலை எதிர்பார்க்கலாம்னு சொல்லியிருக்காங்களாம். நாம போன முறையே இந்த எம்.பி. தேர்தல் பற்றி பேசியிருக்கோம். அரசியல் கட்சிகளும் இப்ப தேர்தல் ஆலோசனைகளில் தீவிரமா இருக்கு.'' 


""நரேந்திர மோடி நாலாவது முறையா குஜராத் முதல்வரா பதவியேற்ற விழாவுக்கு ஜெ. நேரில் போய் பூங்கொத்து கொடுத்து கலந்துக்கிட்டார். அந்த விழாவில் பா.ஜ.க., சிவசேனா போன்ற கூட்டணிக் கட்சிகளைத் தாண்டி, கலந்துகொண்ட வி.வி.ஐ.பி. ஜெ.தான் என்பதால் மீடியாக்களும் அவரை ஹைலைட் செய்தது. அதனால, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. சேருமான்னு டெல்லியில் விவாதங்கள் ஓடிக் கிட்டிருக்கு. ஜெ.வைப் பொறுத்தவரை, மோடியுடன்தான் கூட்டணி. பா.ஜ.க.வோடு இல்லைன்னு கார்டன் வட்டாரம் சொல்லுது. மோடிதான் பிரதமர் வேட்பாளர்னு பா.ஜ.க. அறிவிச்சால், கூட்டணி அமையலாம்னு சொல்றாங்க.''

""டெல்லியில் பிரதமர் தலைமையில் முதல்வர்கள் கலந்துகொண்ட தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்திலிருந்து ஜெ. வெளிநடப்பு செய்து பரபரப்பை உண்டாக்கிட்டாரே?''

""ஆமாங்க தலைவரே.. ஒவ்வொரு  முதல்வரும் பேசுறதுக்கு 10 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு பெரியண்ணன்  போல நடந்துக்குதுன்னும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மதிக்கலைன்னும் மாநில அரசின் பிரச்சினைகளை கவனிப்பதில்லை-நிதி ஒதுக்கவில்லைன்னும் கடுமையா குற்றஞ்சாட்டிப் பேசினார் ஜெ. 10  நிமிடம் ஆனதால் ரெட் லைட் எரிந்து, அவகாசம் முடிந்ததைக் காட்டியது. கடுப்பான ஜெ., என்னை அவமானப்படுத்தும் முறையில் இப்படி செயல்படுறாங்கன்னு சொல்லி வெளி நடப்பு செய்து பரபரப்பை உண்டாக் கிட்டாரு. மோடியும் வெளிநடப்பு செய்தாரு.''

""அதற்கொரு பின்னணியை கோட்டை வட்டாரத்தில் சொல்றாங்கப்பா.. காவிரி  பிரச்சினை, ஈழப் பிரச்சினை இப்படி பலவற்றிலும் தமிழக மக்களுக்கு காங்கிரஸ் மேலே அதிருப்தி இருக்குதுன்னு உளவுத்துறையிடமிருந்து ஜெ. கைக்கு ஒரு  சர்வே ரிப்போர்ட் வந்திருக்கு.  எம்.பி. தேர்தலில் அதை ஜெ. தனக்கு சாதகமா மாத்தணும்னா மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசை கடுமையா எதிர்க்கணும். அப்பதான் 40-க்கு 40 சீட் கிடைத்து, மத்திய அரசை உருவாக்குவதில் பவர்ஃபுல்லா இருக்கும்னுதான் சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் மத்திய அரசுக்கு எதிரா வெளுத்துக் கட்டுறாராம்.''

""அரசியல் கணக்குப்படி அதெல்லாம் சரிதான்.. ஆனா தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் தமிழகத்தோட தேவையை சரியா பதிவு பண்ணியிருக்கணும்னு சீனியர் அரசியல்வாதிகள் சொல்றாங்க தலைவரே.. எல்லாக் காலத்திலும் இப்படி 10 நிமிடம்தான் பேச அனுமதி கிடைக்கு மாம். கலைஞர் முதல்வரா இருந்தப்ப, அந்த 10 நிமிடத்தில், தமிழகத்தோட தேவைகளை பாயிண்ட் பாயிண்ட்டா  சொல்லிட்டு, அதற்கப்புறம் தன்னோட முழுப் பேச்சை அப்படியே எழுத்துப் பூர்வமான டாக்குமெண்ட்டா கொடுத் திடுவார். அதனால, பேச்சும் கவனிக்கப் பட்டு, டாக்குமெண்ட்டும் பதிவாகிடும். அதை சீனியர் தலைவர்கள் ஞாபகப் படுத்துறாங்க..''

""அது.. அந்தக் காலம்!''

""தலைவரே.. இப்ப தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிற ஒரு நிகழ்ச்சி பற்றி சொல்றேன்.. ஜெ.அரசு அந்த நிகழ்ச்சியை உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சிருக்கு. ப.சிதம்பரம் ஒரு பார்வைன்னு ஒரு புத்தகம் வெளியிடப்படுதே.. அந்த நிகழ்ச்சிதான். கலைஞர் வெளி யிடுறாரு. ப.சிதம்பரத்தின் அம்மா லெட்சுமி ஆச்சி வாங்கிக்குறாங்க..''

""கமல், வைரமுத்து இவங்களெல்லாம் கலந்துக்கிறதா இன்விடேஷன் பார்த்தேம்ப்பா.. இலக்கியா நடராஜன், கராத்தே தியாகராஜன், ராஜன் இந்த மூணுபேரும்தானே இந்த நிகழ்ச்சிக்காக பாடுபட்டுக்கிட்டிருக்காங்க. கார்த்தி சிதம்பரம் ஓவராலா எல்லாத்தையும் கவனிச்சிக்கிறாரு...''…

""தலைவரே.. நீங்கள் சொல்றதெல்லாம் சரி. ஆனா, இதை ஜெ. அரசு உன்னிப்பா கவனிக்கிறதுக்கு காரணம், லேட்டஸ்ட் டெவலப்மெண்ட்தான். ஆமா, இந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்துக் குறாரு. விழா நாளான டிசம்பர் 29-ந் தேதியன்னைக்கு ரஜினிக்கு இமயமலையில் புரோகிராம் இருந்ததால, ஆரம்பத்தில் அவர் பெயர் இன்விடேஷனில் இல்லை. அதற்கப்புறம் கராத்தே தியாகராஜன்தான் ரஜினிக்கிட்டே பேசியிருக் கிறார். உங்க நண்பர்களான கலைஞர், ப.சி., கமல், வைரமுத்து கலந்துக்கிற விழாவில் நீங்களும் கலந்துக்கிறதுதானே சரியா இருக்கும்னு கராத்தே தியாகு கேட்டதோடு,, ஏற்கனவே டெல்லி யில் ரஜினியோட விழா ஒன்றில் ப.சி. ஆர்வமா வந்து கலந்துக்கிட்டதையும் ஞாபகப்படுத்த, யெஸ் யெஸ்னு ஆமோதிச்ச ரஜினி, இந்த விழாவுக்கு வருவதற்கு ஒத்துக்கொண்டார். அதனால இப்ப இன்விடேஷன், பேனர், போஸ்டர் எல்லாமே புதுசா ரெடி பண்ணப் பட்டிருக்கு.''

""ஏற்கனவே கலைஞர்ஜி மூப்பனார்ஜின்னு 96 எலெக்ஷன் சமயத்தில் ரஜினி கொடுத்த வாய்ஸ் பலத்த தாக்கத்தை உண்டாக்குனிச்சி. இப்ப மூப்பனார் இல்லை. ஆனா ஜெ.வின் அரசியல் எதிரிகளான கலைஞரும் ப.சி.யும் பங்கேற்கும் விழாவில் ரஜினி கலந்துக்கிறாருன்னா அது ரொம்ப முக்கியமான நிகழ்வாச்சே...'' 

""அதனாலதான் இந்த நிகழ்ச்சியை ஜெ. அரசு உன்னிப்பா கவனிக்குது. ரஜினியின் ஆதர்சமான இடம், இமயமலை. அந்த புரோகிராமை தள்ளி வச்சிட்டு ப.சி. புத்தக விழாவில் அவர் கலந்துக்கிறதுக்கு என்ன கார ணம்னும் அலச ஆரம்பிச்சிருக்காங்க. நான் ரஜினி வட்டாரத்தில் விசாரிச்சேங்க தலைவரே.. தன்னோட பிறந்தநாளுக்காக புக் செய்யப்பட்ட வள்ளுவர் கோட்டம் அரங்கத்தை கடைசி நாட்களில் அரசாங்கத் தரப்பு தர மறுத்ததால் அவருக்கு ஏற்பட்ட டென்ஷன் இன்னும் குறையலையாம்.'' 

""அதைப் பற்றித்தான் நம்ம நக்கீரனில் கவர் ஸ்டோரியே வந்ததே.. 22 வருசம் கழிச்சி, பிறந்தநாளில் ரசிகர்களை ரஜினி சந்திக்கும் நிகழ்ச்சிக்காக பணம் கட்டி புக் பண்ணப்பட்ட அரங்கத்தை தரமாட்டோம்னு சொன்னா யாருக்கும் கோபமும் டென்ஷனும் வரத்தானே செய்யும்?''

""முன்கூட்டியே வள்ளுவர் கோட்டம் அரங்கத்தை ரஜினியோட ரசிகர்கள் பணம் கட்டி, புக் பண்ணி யிருந்தாங்க. ஆனா, அனுமதி  ஓ.கே. ஆகலை. நாளாகிக்கொண்டே போனது. செகரட்டேரி யட்டில் உள்ள உயரதிகாரிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ரசிகர் மன்ற நிர்வாகிகள் தொடர்பு கொண்டு கேட்டப்ப, ஃபைலை நாங்க சி.எம். பார்வைக்கு அப்பவே அனுப்பிட்டோம். அவங்ககிட்டேதான் அது இருக்குன்னு அதி காரிகள் சொல்லியிருக்காங்க. ரசிகர் மன்ற நிர்வாகிகள் இதை ரஜினிக்கிட்டே சொல்லிட் டாங்க. அவரும் வெயிட் பண்ணிக்கிட்டிருந்தார். ஆனா, பிறந்தநாள் விழாவுக்கு சில நாட்கள் முன்னாடி, வள்ளுவர் கோட்டத்தில் கைத்தறித்துறை கண்காட்சி நடக்கவிருப்பதா சொல்லி, ரஜினி விழாவுக்கு அனு மதி கொடுக் கலை. இந்த விஷயம் தெரிஞ்சதும்தான் ரஜினி ரொம்ப டென்ஷன் ஆயிட்டார். ஜெ.வின் பர்சனல் இன்ட்ரஸ்ட் இல்லாம இப்படியொரு முடிவு எடுத்திருக்க முடியாதுங் கிறதுதான் ரஜினியோட கணிப்பு. அதோடு, அரசாங்கம் சொன்னமாதிரி எந்த கண்காட்சியும் அந்த நாளில் வள்ளுவர் கோட்டத்தில் நடக்கலை. திட்டமிட்டு தன்னோட விழாவுக்கு அரங்கம் மறுக்கப்பட்டது ரஜினி மனசிலே காயத்தை உண்டாக்கியிருக்கு.''

""அவர் காயம்படும்போதெல்லாம் வாய்ஸ் கொடுப்பது வழக்கம் தானே.. 1996-ல் ஜெ.வுக்கு எதிரா வாய்ஸ். 2004-ல் பா.ம.க.வுக்கு எதிரா வாய்ஸ்னு ரஜினி தன்னோட மனசை திறந்து காட்டியிருக்காரே...''

""ப.சி. புத்தக விழாவிலும் அப்படி தன் மனசை திறந்து காட்டுவாரோங் கிறதுதான் ஜெ.அரசின் உன்னிப்பான கவனிப்புக்குக் காரணம். இந்த விழா மூலமா ஒரு இணைப்பு உருவாகி, எம்.பி. தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுக்கலாம்னு எதிர்பார்க்கப்படுதுங்க தலைவரே.. அடுத்த மேட்டருக்கு வர்றேங்க தலைவரே.. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன், சொத்துக் குவிப்பு வழக்கை வேகமா விசாரிச்சிக்கிட்டிருக்காரு. சசிகலாவோட 313 ஸ்டேட்மெண்ட் முடிஞ்சி, இப்ப சுதாகரன்கிட்டே கேள்விகள் கேட்கப்படுது. புதன், வியாழன் இரண்டு நாளும் 320 கேள்விகளுக்குப் பதில் சொன்னாரு சுதாகரன்.'' 

""அவரோட பதில் எப்படி இருந்ததாம்?''

""எல்லாமே இங்கிலீஷில்தான் இருந்தது. அதாவது, வக்கீல்கள் முன்கூட்டியே க்ளாஸ் எடுத்துட்டாங்க. புதன்கிழமையன்னைக்கு பதில் சொல்லும்போது, ஜெ. சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் ம்ஹஹ் க்ஷங்ன்னு சொன்னாரு. அதாவது, ஜெ. வாங்கிய சொத்துகள் அதன் பின்னணி பற்றி கேட்கப்பட்டப்ப, இருக்கலாம்…இருக்கலாம்னு மாஜி வளர்ப்பு மகன் சொன்னாரு. சசிகலா பற்றிய கேள்விகளுக்கு எனக்குத் தெரியாதுன்னு இங்கிலீஷில் சொன்னாரு. தன்னைப் பற்றிய கேள்விகளுக்கெல்லாம் எனக்குத் தனிப்பட்ட ஆர்வம் இல்லைன்னும், தனிப்பட்ட பங்களிப்பு இல்லைன்னும் சொன்னாரு.''

""ஜெ. சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் இருக்கலாம்னு சுதாகரன் சொன்னா, அதை ஆமோதிக்கிறாருன்னுதானே அர்த்தம்?''

""அப்படித்தான்.. வக்கீல்கள் இந்த விஷயங்களை கார்டனில் எப்படி சொன் னாங்கன்னும், அங்கேயிருந்து என்ன இன்ஸ்ட்ரக்ஷன் வந்ததுன்னும் தெரியாது. வியாழக்கிழமையன்னைக்கு கோர்ட்டில் ஜெ. பற்றி கேள்விக்கெல்லாம், நான் எல்லாத்தையும் எழுதிக் கொடுத்திடுறேன்னு இங்கிலீஷில் சொன்னார் சுதாகரன். வக்கீல்கள் கொடுத்திருந்த குறிப்புகளை ஓப்பனாகவே கையில் வைத்துக் கொண்டு, பரீட்சை ஹாலில் பிட் அடிப் பதுமாதிரிதான் சுதாகரனின் பதில் சொல்லும் ஸ்டைல் இருந்ததுன்னு பெங்களூரு கோர்ட் வட்டாரம் சொல்லுது.''

""கிரானைட் விவகாரத்தில் அழகிரி மகன் துரை தயாநிதியை மதுரையில் போலீசார் குடைஞ்சிருக்காங்களே?''

""ஆமாங்க தலைவரே.. 100 கேள்விகளுக்கு மேலே கேட்டிருக்காங்க. ஒரே நாளில் உங்க சினிமா கம்பெனிக்கு மதுரையிலிருந்து 5 கோடி ரூபாய் வந்தி ருக்கே.. எங்கிருந்து வந்ததுன்னு போலீஸ் கேட்க, தனக்குத் தெரியலைன்னும் அக்கவுண்ட்ஸ் பார்த்து தான் சொல்லணும்னும் துரைதயாநிதி பதில் சொல்லியிருக்காரு. ஒலிம்பஸ் கிரானைட் கம் பெனியிலிருந்து விலகிட்டீங்கன்னு சொல்றீங்களே, அதற்கு ஏதாவது ரிஜிஸ்டர் டாக்குமெண்ட்ஸ் இருக்கான்னு போலீஸ் கேட்க, எங்களுக்குள் அக்ரி மெண்ட்  போட்டு விலகிட்டோம்னு துரை தயா நிதிகிட்டேயிருந்து பதில் வந்திருக்கு. யாரு சாட்சி கையெழுத்துப் போட்டாங்கன்னு போலீஸ் அடுத்த கேள்வியை வீசியிருக்கு. பார்த்துதான் சொல்ல ணும்னு துரைதயாநிதி பதில் சொல்லியிருக்காரு.''

""ம்...''…

""அவரை விசாரிச்சிக்கிட்டிருந்தப்பவே நடுநடுவே டி.எஸ்.பி.யும் ஏ.எஸ்.பி.யும் மொட்டை மாடிக்குப்போய் விசாரணை நிலவரத்தை யார் கிட்டேயோ சொல்லி, அங்கிருந்து வந்த  இன்ஸ்ட் ரக்ஷன்படி தொடர்ந்து விசாரிச்சிருக்காங்க. எல்லாத்தையும் துரைதயாநிதி ஃபேஸ் பண்ணிய தகவல்  அவரோட அப்பாவும் மத்திய அமைச்சரு மான மு.க.அழகிரிக்குத் தெரியவர, ஆனது ஆயிடிச்சி.. துரை தயாராயிட்டதால, அரசியலில் நேரடியா இறக்கிடவேண்டியதுதான்னு சொல்லியிருக்காரு. வரும் எம்.பி. தேர்தலில் மதுரை வேட்பாளரா நிறுத்துறதுன்னு தன் ஆதரவாளர்கள்கிட்டே சீரியஸாவே சொல்லிக்கிட்டிருக்காராம் அழகிரி.''

""மதுரையில் ராமதாஸ் நடத்திய சாதி அமைப்புகள் கூட்டத்தையடுத்து, ஆர்ப்பாட்டமும் நடத்த இருந்த சமயத்திலேதானே 144 தடை யுத்தரவு போடப்பட்டதோடு, ராமதாசுக்கு மதுரை கலெக்டர் நோட்டீசும் அனுப்பினாரு?''

""ஆமாங்க தலைவரே.. அதனால பா.ம.க. வக்கீல்கள் மதுரை கலெக்டரை  சந்தித்து, கலவரத் தைத் தூண்டும் விதத்தில் டாக்டர் எதுவும் பேச லைன்னு விளக்குனாங்க. எங்ககிட்டே ஆதாரம் இருக்குன்னு கலெக்டர் சொல்லிட்டாராம். இந்த சமயத்தில்தான் சேலத்தில் வியாழக்கிழமையன் னைக்கு சாதி அமைப்புகளைக் கூட்டி ஆலோசனை நடத்தினாரு ராமதாஸ்.  செய்தியாளர்களை அனு மதிக்கல. இவங்களை ஒரு ரூமில் போட்டு பூட்டி வையுங்கடா. பத்திரிகைகாரன்னா என்ன பெரிய ஆளான்னு ஒருத்தர் எகிறியபடி பாய, அங்கே ஒரே பரபரப்பாயிடிச்சாம். பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தி செய்தியாளர்களும் குரல் கொடுத்திருக் காங்க. பிரஸ் மீட்டை புறக்கணிப்பதுன்னும் முடிவெடுத்து திரும்பிட்டாங்க.''

""அப்புறம்?''

""போனில் ராமதாஸ் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவிச்சிருக்காரு. பத்திரிகையாளர்களோ, எங்கள் மீது பாய்ஞ்சவரை மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கன்னு சொல்ல, விடுதலை  சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்தான் உள்ளே ஊடுருவி இப்படிப் பண்ணிட்டாருன்னு  பா.ம.கவினர் சொல்லியிருக் காங்க. கடைசியில், சம்பந்தப்பட்ட ஆளே நேரில் வந்து  மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அவர் பேட்ஜ் குத்திய பா.ம.க.காரர்ங்கிறது உறுதியாயிடிச்சி.'' 

""மதுரையில்  சா…தீ பரவுற மாதிரி பேசுன ராமதாஸ் சேலத்தில் என்ன பேசுனாராம்?''

""அதை நான் சொல்றேன். ஆலோசனை கூட்டத்தில் வழக்கம் போலவே தடாலடி பேச்சும் அதிரடித் தீர்மானங்களும்தான். அதன்பிறகு நடந்த பிரஸ் மீட்டில், மதுரை கலெக்டர் போட்டி ருக்கும் தடை பற்றிக் கேட்கப்பட, எவனோ ஒருவன் என்னைத் தடுக்க முடியுமா? என்ற ராமதாஸ், காதல் திருமணம் பற்றியும் அதிரடியாகப் பேசினாரு. சொந்த அத்தைப் பையனா இருந்தா லும் படிக்காதவனா வசதியில்லாதவனா இருந்தா அவனை வெட்டிடுவாங்க, மத்த சாதிக்காரனா இருந்தா என்ன நடக்கும்னு டெரரா கேட்டாரு.''

ad

ad