புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2013


இலங்கை அரசின் இணையத்தளங்கள் மீதான தொடரும் தாக்குதல்கள

இலங்கை  அரசின் இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதுவரை சிறிலங்கா அரசின் 50 இணையத்தளங்கள் வரை சைபர் தாக்குதலுக்கு இலக்காகி செயலிழந்துள்ளன.
ஆகப்பிந்திய தாக்குதல் நல்லிணக்க ஆணைக்குழுவின் இணையத்தளம் மீது நடத்தப்பட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்களால் கணினிகளில் சேமிக்கப்பட்டிருந்த  இலங்கை அரசின் அதிகாரபூர்வ ஆவணங்கள், தகவல்களும் அழிந்து போயுள்ளன.
ஊழியர் சேமலாப நிதியம், நீதி அமைச்சு, தேசிய அருங்காட்சியகம், குடிவரவுத் திணைக்களம், விவசாயத் திணைக்களம், ஊவா மாகாண சுற்றுலாப் பிரிவு, மூலோபாய நிறுவன முகாமைத்துவ முகவரகம், தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் நிலையம், வடமத்திய மாகாணசபை, துறைமுக அதிகாரசபை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், சிறிலங்கா சுங்கத் திணைக்களம், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையம், மதிப்பீட்டுத் திணைக்களம், நிதி ஆணையம், மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம், தேசிய பாரம்பரிய அமைச்சு உள்ளிட்டபல தளங்கள் சைபர் தாக்குதலால் முடங்கியுள்ளன.
தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் நிலையத்தின் இணையத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பல வாரங்களாகியும் இதுவரை அது மீள இயங்கத் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad