புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2013


ஐநா மனிதவுரிமை ஆணைக்குழுவின் முன் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையின் உள்ளடக்கம்!
ஐக்கிய நாடுகளவையின் மனிதவுரிமை ஆணைக்குழுவின் முன் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையின் வரைபு வெளிவந்துள்ளது.
கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உசாத்துணையாகக் காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை போரின் போதான கற்கைகள் மற்றும் இனங்களின் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதையே குறிப்பிட்டு நிற்பதுடன், கீழ்க்காணும் ஐந்து புள்ளிகளையும் ஆவன செய்யும்படியும் கோரியுள்ளது.
1) ஐ.நா. மனிதவுரிமை ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கையை இந்தத் தீர்மானம் வரவேற்கிறது.
2) போரின் போதான கற்கைகள் மற்றும் இனங்களின் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் ஆரோக்கியமான பரிந்துரைகளை விரைவாகச் செயற்படுத்துதல், இலங்கைத் தீவின் அனைத்துப் பிரஜைகளிற்கும் நீதி, சமத்துவம், மீளிணக்கம், பொறுப்பாற்றல் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான சுயாதீன நடைமுறையை ஏற்படுத்துதல்
3) மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோரின் சுயாதீனச் செயற்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களிற்கு  இலங்கை உத்தியோகபூர்வமாக பதிலிறுக்க வேண்டுதல், சுதந்திரமாக கருத்துக்கூறல், தனிநபர்களின் ஒன்றுகூடுதலிற்கான உரிமை, நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள், விசாரணையற்ற கொலைகள், சிறுபான்மையினரின் விவகாரங்கள், காணமற் போதல் தொடர்பான விவகாரங்கள் மற்றும் பெண்களிற்கெதிரான வன்முறைகள் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுத்தல்
4) மனிதவுரிமை ஆணைக்குழு இது தொடர்பாக விடயங்களில் சிறீலங்காவிற்கு தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்குதல்.
5) மேற்கண்ட விவகாரங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து அடுத்த மனிதவுரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் இது தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவையின் மனிதவுரிமை ஆணையகம் சமர்ப்பித்தல்.
ஆகியனவே அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மானமாகும்.
- See more at: http://tamilwin.com/show-RUmryDTWNYmu3.html#sthash.4XSHzk00.dpuf

ad

ad