புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2013


மூவரின் உயிரைக் காக்க தமிழக முதல்வருக்கு மதிமுக - திமுக - தமிழக பொதுவுடமைக் கட்சி கோரிக்கை
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்து மூன்று தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
உச்ச நீதிமன்றம் தேவேந்திரபால் சிங் புல்லர் மரண தண்டனையை உறுதிபடுத்தி தந்த தீர்ப்பு மனித உரிமை ஆர்வலர்களைப் பேரிடியாகத் தாக்கி உள்ளது.
திருப்பெரும்புதூர் கொலை சம்பவத்தில் துளி அளவும் தொடர்பு இல்லாத நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரையும் காவல்துறை துன்புறுத்திப் பெற்ற நீதிக்குப் புறம்பான ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு தடா நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் இந்திய அரசியல் சட்டம் 72வது பிரிவின்படி இந்தியக் குடியரசுத் தலைவருக்கும், இந்திய அரசியல் சட்டம் 161வது பிரிவின்படி மாநில ஆளுநருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் சட்டம் 72வது பிரிவின்படி குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரம், 161வது பிரிவின்படி மாநில ஆளுநரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தாது என்று அரசியல் சட்டத்தில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் ஏற்கனவே சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் கருத்தில் கொண்டு மாண்புமிகு முதல்வர் தமிழக அமைச்சரவையைக் கூட்டி அதில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கு முடிவெடுத்து மாநில ஆளுநர் மூலம் இந்த மனிதநேய முடிவைச் செயல்படுத்தி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
சென்னையில் பொதுக்கூட்டம்
பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவர் உயிரைக் காப்பாற்ற ஏப்ரல் 30ம் தேதி தலைநகர் சென்னையில் மூன்று தமிழர் உயிர்காக்கும் இயக்கத்தின் சார்பில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது எனவும், அதற்கான ஆக்கப் பணிகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் செய்வதென்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
3 பேரின் தூக்கு தண்டனையை மாற்ற அரசு தீர்மானம் நிறைவேற்றுக:  கருணாநிதி
ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்குத் தண்டனையை மாற்ற விதிமுறைப்படி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
புல்லர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தூக்குத் தண்டனையை அறவே ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தி.மு.க நிலைப்பாடு.
எனவே முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை மாற்ற தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி 3 பேரையும் விடுவிக்க ஆவண செய்ய வேண்டும்.
 மேலும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை தொடர்ந்து சிறையில் வைக்காமல் விடுவிக்க வேண்டும் என்றும் கருணாநிதி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் தேசிய பொது உடமைக் கட்சி
இதேபோல் மூவரின் மரணத் தண்டனையை தமிழக அரசே ரத்து செய்ய வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
புல்லர் வழக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் வழக்கும், பெரிதும் ஒத்தத்தன்மையானவை என இதே நீதிமன்றம் வரையறுத்துவிட்டால், புல்லர் வழக்கில் தீர்ப்புரைத்தது போலவே உச்ச நீதிமன்றம் மூவர் வழக்கிலும் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்புரைக்கும் ஆபத்து உண்டு.
எனவே அரசமைப்பு சட்டவிதி 161-ன்படி தமிழக அமைச்சரவை முடிவு செய்துஇ மாநில ஆளுநர் மூலமாக பேரறிவாளன்,சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய பொது உடமைக் கட்சியின் செயலாளர் கி.வெங்கட்ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்

ad

ad