புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2013


எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டுமே ஆதரித்தார்!-விகடன் 
இந்திய மத்திய அரசு அனைத்து ஈழப் போராளிக் குழுக்களுக்கும் ஆயுதப் பயிற்சி அளித்தது. ஆனால், எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டுமே ஆதரித்தார். இவ்வாறு விகடனில் வெளியாகும் கழுகார் பதில்கள் பத்தியில் வாசகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
கேள்வி:  மத்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளை ஆதரித்ததால்தான் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரும் புலிகளை ஆதரித்தார். மத்திய அரசு அவர்களை எதிர்த்திருந்தால் எம்.ஜி.ஆர். ஆதரித்திருக்க மாட்டார் என்று சிலர் பிரசாரம் செய்கிறார்களே?
கழுகார் பதில்: இது, வரலாறு அறியாதவர்களின் பேச்சு. மத்திய அரசு அனைத்துப் போராளிக் குழுக்களுக்கும் ஆயுதப் பயிற்சி அளித்தது. ஆனால், எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டுமே ஆதரித்தார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் கொண்டு வந்த போது, பிரபாகரன் அதை கடுமையாக எதிர்த்தார்.
எம்.ஜி.ஆர். சொன்னால் பிரபாகரன் சம்மதிப்பார் என்று நினைத்து, அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்த பிரபாகரனைச் சந்தித்தார் எம்.ஜி.ஆர்.
உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதை நீங்கள் செய்யுங்கள். நீங்கள் செய்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று, பிரபாகரனிடம் சொல்லிவிட்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.
இந்த வரலாற்றை அன்டன் பாலசிங்கம் தன்னுடைய 'போரும் சமாதானமும்’ புத்தகத்தில் விரிவாகச் சொல்லி இருக்கிறார்.
எனவே, ஈழப் பிரச்சினையில் மத்திய அரசாங்கத்தின் அசைவுக்குத் தகுந்த மாதிரி எம்.ஜி.ஆர். செயல்படவில்லை என்பதே உண்மை.

ad

ad