புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 மே, 2013

பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி 
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பள்ளி சிறுவர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  அந்த பேருந்து இஸ்லாமாபாத் நகரில்
இருந்து 200 கி.மீ. தொலைவில் குஜராத் நகர் அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதில், ஆசிரியர் ஒருவர் மற்றும் 17 குழந்தைகள் பலியானார்கள். மேலும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  இந்த சம்பத்தை தொடர்ந்து பேருந்து ஓட்டுனர்  அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.  எரிவாயு சிலிண்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு அதில் இருந்து தீப்பற்றியிருக்க கூடும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.