புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2013



பாராட்டு விழா நடத்தத் தயார்! அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் சவால்!
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு 90 சதவீதம்
பணிகள் நிறைவடைந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை காழ்புணர்வு காரணமாக அதிமுக அரசு முடக்கி வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் முல்லை வேந்தன் தலைமையில் பெரியாம் பட்டியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தர்மபுரி வடக்கு மாவட்டம் சார்பில் தேர்தல் நிதியாக ஒரு கோடியே 3 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. 
கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்,
நாடாளுமன்ற தேர்தலின்போதே, தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வராதா என மக்கள் ஏங்குகின்றனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1928 கோடி ரூபாய் செலவில் திமுக ஆட்சியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது என்றார். 
மேலும் பேசியபோது, தான் அமைச்சராக இருந்தபோது திட்டப் பணிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை நேரில் சென்று பார்வையிட்டதாகவும், 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அதிமுக அரசு அந்த திட்டத்தை முடக்கி வருவதோடு, காலம் தாழ்த்தி வருகிறது. இரண்டு மாதங்களில் திட்டப் பணிகளை முடித்து செயல்படுத்தினால் திமுக சார்பில் பாராட்டு நடத்த தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

ad

ad