புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஆக., 2013

யாழ்ப்பாணத்தில் போட்டியில் டக்ளஸ் இல்லை, தவராசாவே முதன்மை வேட்பாளர் - நாமலின் நீலப் படையும் போட்டி
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளராக, ஈபிடிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகருமான சின்னத்துரை தவராசா போட்டியிடவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், ஈபிடிபிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஈபிடிபி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விபரமும் வெளிவந்துள்ளது.

யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கமல், யாழ்.மாவட்ட அமைப்பாளர் ஐ.சிறிரங்கேஸ்வரன், வடமராட்சி அமைப்பாளர் எஸ்.பாலகிருஸ்ணன், அலெக்சான்டர் சூசைமுத்து (சாள்ஸ்), சுந்தரம் டிவகலாலா, ஆறுதல் நிறுவன இணைப்பாளர் ஏ.அகஸ்டின், சிகரம் ஊடக நிறுவன பணிப்பாளர் கோ.றுசாங்கன், பனை தென்னை வள கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.கணேசன், ஆகியோரே, ஈபிடிபி சார்பில் போட்டியிடவுள்ளனர்.

நேற்று முன்தினம் தவராசாவும், நேற்று ஏனைய வேட்பாளர்களும் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் வேட்பாளர் பட்டியலில் ஒப்பமிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நாமலின் நீலப் படையும் போட்டி 

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் நாமல் ராஜபக்சவின் புளூ பிரிகேட் (நீலப் படை) எனப்படும் நாளைய இளைஞர் அமைப்பு யாழ். மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியில் இறங்கியுள்ளது.

இந்த அமைப்பைச் சேர்ந்த அன்ரனி ரங்கதுசார என்பவரின் தலைமையில் வேட்பாளர் பட்டியல் இன்று யாழ். மாவட்டச் செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் போட்டியிடும் நிலையில், சிறிலங்கா அதிபரின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் தனது நாளைய இளைஞர் அமைப்பை போட்டியில் இறக்கி விட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில், அதிகளவு சுயேட்சைக் குழுக்களைக் களமிறக்கி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கும் வாக்குகளை சிதைக்க அரசாங்கத் தரப்பு திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாகவே நாமல் ராஜபக்ச சுயேட்சைக் குழுவொன்றை களமிறக்கியுள்ளதாக கருதப்படுகிறது.

சிறிலங்கா அதிபருக்கும், ஆளும்கட்சிக்கும் சார்பாகவே தாம் போட்டியிடுவதாக முதன்மை வேட்பாளர் அன்ரனி ரங்க துசார தெரிவித்துள்ளார் என்பது 

ad

ad