புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2013

நவநீதம்பிள்ளையின் அறிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல!- இலங்கை பிரதிநிதி ரவிநாத்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வாய்மொழி மூல அறிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இலங்கை அரசாங்க பிரதிநிதி  தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
நேற்றைய அமர்வில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அண்மையில் இலங்கைக்கு தாம் மேற்கொண்ட விஜயம் குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
எனினும், இந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோர நவனீதம்பிள்ளைக்கு அதிகாரங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை விவகாரம் குறித்து அவசர அவசரமாக கவனம் செலுத்த வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஊக்கமளிக்க வேண்டுமே தவிர, அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மோசமாகக் காணப்படுவதாக நவனீதம்பிள்ளை வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ரவிநாத் தெரிவித்துள்ளார்.
ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க வழமையான பாணியில் நவிபிள்ளையின் அறிக்கையினை நிராகரித்ததுடன், நாட்டில் இராணுவம் எந்தக் குற்றமும் செய்யவில்லை நாம் ஜனநாயகத்தை மதிக்கிறோம் என்பதற்கு வடமாகாண சபை தேர்தல் சிறந்த எடுத்துக்காட்டு எனக் கூறியிருந்தார்.
 எனினும் இலங்கை பிரதிநிதி ஐநா பேரவையில் அறிக்கையின் விடங்களை நியாயப்படுத்தி சொல்ல முற்பட்ட வேளை சபைக்கு தலைமை தாங்கியவரால் உரை இடைநிறுத்தப்பட்டது. மேலும் உரையாற்ற முற்பட்ட வேளை அனுமதி மறுக்கப்பட்டது.

ad

ad