புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2013

காஷ்மீர் எல்லையில் அத்துமீறல் ஒரேநாளில் 25 இடங்களில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல்
பாகிஸ்தான் ராணுவம் கடந்த 2 மாதமாக இந்திய எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீருக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய வீரர்களும் தக்க பதிலடி
கொடுத்து வருகிறார்கள். இதனால் எல்லையில் அவ்வப்போது துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
தாக்குதல் நடத்துவதன் மூலம் இந்திய ராணுவத்தின் கவனத்தை திருப்பி தீவிரவாதிகளை ஊடுருவ செய்வதற்காக பாகிஸ்தான் இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் மிகப்பெரிய அத்துமீறலில் ஈடுபட்டது. காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் 25–க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியது.
அங்குள்ள எல்லைப் பாதுகாப்பு படை முகாம்கள் மீது துப்பாக்கியால் சுட்டும், எறி குண்டுகள் வீசியும் தாக்கியது. இதையடுத்து இந்திய வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு கூடுதல் படைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
காஷ்மீர் எல்லையில் உள்ள கதுவா, சம்பா, ஹீரா நகர், ஆர்.எஸ்.புரா, பர்காவல் உள்ளிட்ட இடங்களில் இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தான் படைக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக் கின்றன.
இந்த சண்டையில் இந்திய தரப்பில் எல்லைப் பாதுகாப்பு படைவீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் ஊடுருவல்காரர் ஒருவரை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தி ஊடுருவல் சதியை முறியடித்தனர்.
பாகிஸ்தானின் இந்த செயலுக்கு காஷ்மீர் முதல்–மந்திரி உமர் அப்துல்லா கடும் கண்டம் தெரிவித்துள்ளார். எல்லையில் ஊடுருவல் மற்றும் அத்துமீறலை தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் 150 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபோன்ற தாக்குதல் நீடிக்கும் நிலையில் பாகிஸ் தானுடன் சமரச பேச்சு தொடர்வது கடினமான ஒன்று என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்திய எல்லையையொட்டி 40 இடங்களில் தீவிரவாதிகளுக்கான பயிற்சி முகாம்களை பாகிஸ்தான் நடத்தி வருவதாகவும், இங்கு பயிற்சி பெற்ற 700 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாகவும் உளவுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது நடைபெறும் தாக்குதலால் காஷ்மீர் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ad

ad