புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2013




             ட்டமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் 29-ந்தேதி முடிவடையும் நிலையில், 30-ந்தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ. நேரில் ஆஜராவாரா என்ற கேள்விக்கான பதில் இன்னமும் சரியாகக் கிடைக்கவில்லை. மேல் நீதிமன்றங்களில் ஜெ. தரப்பு அப்பீலுக்கு செல்லுமா? சிறப்பு கோர்ட் நீதிபதியின் அணுகுமுறை எப்படி இருக்கும்? என்பன போன்ற கேள்விகளுடன் பெங்களூருவில் இருந்தோம்.

ஆயுத பூஜை கொண்டாட்டங்களில் அமர்க்களப்பட்டிருந்தது பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் வளாகம். அங்குதான் ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெறும் ஸ்பெஷல் கோர்ட்டும் உள்ளது. அங்கு மட்டும் பூஜை புனஸ்காரங்கள் இல்லை. காரணம், நீதிபதி முடிகவுடர்தான். 

""இது மதச்சார்பற்ற நீதிமன்றம். இங்கு இந்துமத பண்டிகையான ஆயுத பூஜையை கொண்டாடுவது தவறு. இந்த பூஜைக்கான செலவை யார் ஏற்பது. நீதிமன்ற செலவுகளுக்கு அரசு கொடுக்கும் பணத்தில் பூஜை நடத்துவது சட்ட விரோதம். ஊழியர்கள் தங்கள் சொந்த செலவில் கொண்டாடினால் அதனால் ஏற்படும் செலவீனங்களை அவர்கள் எப்படி ஈடுகட்டுவார்கள். அது தவறு செய்ய அவர்களை தூண்டிவிடும் செயலாக மாறி விடும். எனவே இந்த பூஜை கொண்டாட்டங்கள் எல்லாம் நான் நீதிபதியாக இருக்கும் கோர்ட்டில் நடக்கக்கூடாது'' என நீதிபதி முடிகவுடர் சொல்லிவிட்டாராம். "இப்படி ஒரு வித்தியாசமான நீதிபதியை நாங்கள் பார்த்ததே இல்லை' என்றார்கள் கோர்ட் ஊழியர்கள் ஆச்சரியத்துடன்.

நீதிபதியை சந்திக்கும் ஆவலுடன் நாம் பெங்களூருவில் தான் இருந்தோம். ஜெ.வின் வழக்கோடு கூடுதல் பொறுப்பாக முத்திரைத்தாள் மோசடி வழக்கை விசாரிக்கும் 36-வது அடிஷனல் செஷன்ஸ் கோர்ட், பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் 6-வது மாடியில் உள்ளது. நீதிபதி காலை பத்தரை மணிக்கு வந்துவிட்டார். அதிக உயரமில்லை. வயதை வெளிப்படுத்தாத இளமையான தோற்றம். நீதிபதிகள் அணியும் கோட்-சூட் இவற்றுடன் வந்த முடிகவுடர், லிஃப்ட்டிலிருந்து வெளியே வந்து நீதிமன்றத்திற்குப் போகும் வழியில் எதிர்ப்பட்டவர்களுடன் கலகலப்பாக பேசியபடியே வந்தார். இதற்குமுன் ஜெ. மீதான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இப்படி இல்லை. அவரை நமது புகைப்பட நிபுணர் ஸ்டாலின் படமெடுத்தபோது, ""நீங்க கோர்ட் வளாகத்திற்குள் படம் எடுப்பதை வழக்கறிஞர்கள் பார்த்துவிட்டால் உங்களை முட்டிக்கு முட்டி தட்டி ஜெயிலுக்கு அனுப்பி விடுவார்கள். முந்தின நாள் ஒரு பத்திரிகை எடிட்டரையே அடித்து ஜெயிலுக்கு அனுப்பினார்கள். அப்படி பிரஸ்ஸும் வக்கீலும் மோதுற இடம் இது. பார்த்து எடுங்க'' என சிரித்தபடி கமெண்ட் அடித்தார்.

"இவ்வளவு வெளிப்படையான மனிதரா?' என நமக்குள் ஆச் சர்யத்தை வரவழைத்த முடிகவுடர் தனது அறையில் போய் அமர்ந்ததும் நம்மை கூப்பிட்டனுப்பினார். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் யார் என விசாரித்தார். "ஓ தமிழ்நாடு பிரஸ்ஸா' என கன்னடத்தில் பேச ஆரம்பித்தவரிடம் ஜெ. வழக்கை பற்றி பேசினோம். ""கடந்த பதினேழு வருடங்களாக பல்வேறு திருப்பங்களுடன் நடைபெறும் இந்த வழக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்'' என்றோம். 

லேசாகப் புன்னகைத்த அவர், ""இந்த வழக்கை மட்டுமே விசாரிக்கும் தனி நீதிபதியாக என்னை இன்னமும் நியமிக்கவில்லை. ஊழல் தடுப்பு சட்டப்படி தனி நீதிபதியாக நியமிக்க சில நடைமுறைகள் உள்ளன. கடந்த 30-ந்தேதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதும் முத்திரைத்தாள் மோசடி வழக்குகளை விசாரித்த என்னை ஜெயலலிதாவின் வழக்கு நடக்கும் நீதிமன்றத்திற்கு தற்காலிக நீதிபதியாக நியமித்தார்கள். தற்பொழுது என்னை இரண்டு நீதிமன்றங்களுக்குத் தலைமை தாங்கும் நீதிபதியாக நியமித்துள்ளார்கள். இது எத்தனை காலம் நீடிக்கும் என தெரிய வில்லை. ஒருவேளை நான் தனி நீதிபதியாக நியமிக்கப்படலாம் அல்லது நியமிக்கப்படாமலும் போகலாம்'' என தனது பதவியின் நிரந்தரமின்மையை பற்றி சொன்னார் முடிகவுடர்.

அவரிடம் "ஜெ.வுக்கெதிரான வழக்கை பற்றி உங்களது கருத்து என்ன'வென கேட்டோம். 

""அந்த வழக்கில் உள்ள விவரங்களை தற்பொழுது தான் படித்து வருகிறேன். அதைப் பற்றி நான் கருத்துக் கூறுவது சட்டப்படி தவறு. பத்திரிகையாளர்களிடம் இந்த வழக்கு பற்றி பேசுவதும் பேட்டி கொடுப்பதும் நீதிபதிகளின் நடைமுறை ஒழுங்குப்படி குற்றம்'' என்று கூறி நம்மிடம் விடை பெற்றுக்கொண்டார் முடிகவுடர்.

நீதிபதிக்கு நெருக்கமான நீதித்துறை வட்டாரங்களில் பேசியபோது... முடிகவுடரைப் பற்றி ஒருவித பிரமிப்புடன்தான் பேசுகிறார்கள்.

""முடிகவுடர் விசாரிக் கும் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர்கள் குற்ற வாளியல்ல என நிரூபணம் ஆகும்  வரை எந்தச் சலுகையும் நீதிமன்றத்திலிருந்து பெற முடியாது. அவர் பெல்காம் மாவட்ட நீதிபதியாக இருந்தபொழுது அரசியல்வாதிகள் மீதான வழக்குகள் பலவற்றை விசாரித்திருக்கிறார். அந்த அரசியல்வாதிகள் பல வகையில் இவரது நீதிமன்றத்தில் சலுகைகள் பெற முயற்சித்தார்கள். அந்த முயற்சிகளை மிகவும் அமைதியாக அனுமதிக்க மறுத்து, அவர்களுக்குப் பாடம் புகட்டியவர் முடிகவுடர். கர்நாடகாவின் மிகப்பெரிய அரசியல்வாதியான ரோஷன்பெய்க், முத்திரைத்தாள் மோசடியில் தொடர்புடைய குற்றவாளிகள் என பலர் முடிகவுடர் என்றாலே பெட்டிப் பாம்பாக அடங்கி, அவர் சொல்படி கேட்பார்கள்.

"இந்த வழக்கில்  ஜெ.வும் குற்றம்சாட்டப்பட்டவர்தான். அவர் மாநில முதல்வராக இருந்தால் என்ன? அவருக்கு ஏன் விதிவிலக்குத் தரவேண்டும்? 30-ந் தேதி ஜெ. இந்த வழக்கில் ஆஜராக வேண்டும். வருவது அவர் கடமை. அவருக்கு பாதுகாப்பு அளிப்பது எப்படி என்பதை கோர்ட் பார்த்துக்கொள்ளும்' என அதிரடியாகப் பேசக்கூடியவர் முடிகவுடர்'' என்கிறது அவருக்கு நெருக்கமான நீதித்துறை வட்டாரங்கள். 

முடிகவுடர் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப் படுவாரா? என கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திராவிடம் கேட்டோம். ""முடிகவுடரின் நியமனம் பற்றி முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் கர்நாடக அரசிடம் இல்லை. உயர்நீதிமன்றம்தான் முடிவு செய்யும்'' என்றார்.

இதைப்பற்றி கொஞ்சம் விளக்கமாகவே பேசினார்கள் அட்வகேட் ஜெனரல் ரவிவர்மா குமாருக்கு நெருக்கமானவர்கள். ஜெ. மீதான வழக்கு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தலைமை தாங் கும் நீதிபதியை நியமிக்க ஒரு தனி சட்ட நடை முறை உள்ளது. அதன்படி கர்நாடக அரசு யாரை, நீதிபதியா நியமிக்கலாம் என 4 நீதிபதிகள் பெயரை பரிந்துரை செய்யும். அதை கர் நாடக உயர்நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும். இதுதான் வழக்கம். கர்நாடக அரசு பரிந்துரைக்கும் நீதிபதிகள் லிஸ்ட்டிலிருந்துதான் ஒருவரை சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. உயர் நீதிமன்றம் யாரை வேண்டுமென்றாலும், நீதிபதியாக நியமிக்க உரிமை உண்டு. அதை மறுத்துப் பேச கர்நாடக அரசுக்கு உரிமை இல்லை. தற்பொழுது இருக்கும் முடிகவுடரே நீதிபதியாக தொடர்வாரா? அல்லது தற்பொழுது நீதிமன்ற வட்டாரங்களில் முணுமுணுக்கப்படும் தொழிலாளர் நலத்துறை கோர்ட் நீதிபதி கமலா வருவாரா? என்பதை உயர்நீதிமன்றம்தான் முடிவு  செய்யும்'' என்கிறார்கள்.

30-ம் தேதி வரமாட்டேன் என ஜெ. வியூகம் அமைக்க, விடமாட்டேன் என்பதுபோல் வழக்கின் போக்கு இருக்கிறது.    

-தாமோதரன் பிரகாஷ்
படங்கள் : ஸ்டாலின்

ad

ad