புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2013

மத்திய மாகாணசபை: எதிர்க்கட்சியினர் பிரேரித்த உறுப்பினருக்கு ஆளும் கட்சியின் ஒரு பிரிவினர் சார்பாக வாக்களித்துள்ளனர்.ஆளுங்கட்சிக்குள் பிளவு
இலங்கையின் மத்திய மாகாணசபை ஆரம்ப அமர்வின் போது மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எச்சரிக்கை விடுக்கும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே அண்மையில் இடம்பெற்ற மத்திய மாகாணசபை தேர்தலில் வெற்றிப்பெற்றது.
எனினும் அதில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற இலங்கை பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் மகன் அநுராத ஜயவர்த்தனவை புறக்கணித்து, முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் முதலமைசசராக நியமித்தார்.
இதனையடுத்து மத்திய மாகாணசபைக்குள் ஆளும் கட்சியினர் மத்தியில் விரிசல்கள் தோன்றியுள்ளன.
இந்தநிலையில் நேற்று சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகள் இடம்பெற்றபோது எதிர்க்கட்சியினர் பிரேரித்த உறுப்பினருக்கு ஆளும் கட்சியின் ஒரு பிரிவினர் சார்பாக வாக்களித்துள்ளனர்.

இதன்காரணமாக ஆளும் கட்சிக்கு தோல்வி ஏற்படாத போதும் மத்திய மாகாணசபையில் உள்ள ஆளும் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளமையை இது எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
மத்திய மாகாண சபை 58 உறுப்பினர்களைக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அதில் 40 உறுப்பினர்கள் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அதேவேளை, எதிர்கட்சியினருக்கு 18 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு 36 ஆசனங்களும், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு 2 உறுப்பினர் வாய்ப்புகளும், முஸ்லிம் காங்கிரசுக்கும், மலையக மக்கள் முன்னணிக்கு தலா ஒவ்வொரு ஆசனங்களுமாக ஆளும் தரப்புக்கு 40 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்கட்சியினருக்கு கிடைத்துள்ள 18 உறுப்பினர் வாய்ப்புகளின் படி ஐக்கிய தேசிய கட்சிக்கு 16 ஆசனங்களும், ஜனநாயக கட்சிக்கு 2 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

ad

ad