புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2013

கருப்பு பண இந்திய முதலைகளை அம்பலப்படுத்தும் சுவிஸ்

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியானது கருப்புப் பணத்தை போட்டு வைத்திருப்பது யார் என்ற ரகசிய விவரத்தை வெளியிடத் தயாராகியுள்ளன.
சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட சமீபத்திய கணக்குப்
படி, இந்தியர்கள் அங்குள்ள வங்கிகளில் குவித்துள்ள கருப்புப் பணம் மட்டும் ரூ. 9000 கோடியாகும்.
இது 2012ம் ஆண்டு கணக்காகும். ஒட்டுமொத்தமாக சுவிஸ் வங்கிகளில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் ரூ. 90 லட்சம் கோடி பணத்தைக் குவித்து வைத்துள்ளனர்.
சுவிஸ் வங்கிகளில் பணத்தைப் போட்டு வைத்திருப்போர் பெயர் விவரங்களை ரகசியமாக அந்நாட்டு அரசாங்கம் வைத்திருந்ததால் இந்தியர்களின் பெயர்களைப் பெற முடியாமல் மத்திய அரசு தவித்தது.
ஆனால் தற்போது இந்த ரகசியங்களை அம்பலப்படுத்த சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்திருப்பதால் இந்தியாவுக்கு நிம்மதி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஒப்பந்தம் ஒன்றிலும் சுவிட்சர்லாந்து அரசு கையெழுத்திட்டுள்ளது. இதில் 58 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதில் இந்தியாவும் ஒரு நாடாகும்.
இந்த ஒப்பந்தத்தின்படி தங்களது நாட்டைச் சேர்ந்த யாரேனும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக அந்த நாடு சந்தேகிக்குமானால், அந்த நபர் சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பண விபரம் குறித்த விடயத்தை சுவிஸ் வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் அந்த விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.

ad

ad