புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2013

பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் ஊடகவியலாளர்கள் பட்டியலின் கீழ் கெலும் மக்ரே இலங்கை வருகிறார்
பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தினால் சமர்பிக்கப்பட்ட 30 ஊடகவியலாளர்களின் பெயர் பட்டியலில் சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே பெயர் இருந்ததன் காரணமாவே இலங்கை அரசாங்கம் அவருக்கு வீசா அனுமதியை வழங்க நேர்ந்ததாக தெரியவருகிறது.
இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விபரிக்கும் இலங்கையின் கொலைக்களம் மற்றும் போர் தவிர்ப்பு வலயம் ஆகிய விவரணப் படங்களை நெறிப்படுத்திய மக்ரே மீது இலங்கை அரசாங்கம் கடும் கோபத்தில் இருந்து வந்தது.
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு தொடர்பான செய்தி சேகரிப்புக்காக மக்ரே வீசா கோரி விண்ணப்பித்திருந்தார். எனினும் அரசாங்க அதிகாரிகள் அவருக்கு வீசா வழங்க எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் பிரதமர் டேவிட் கமரூனின் அலுவலகம் வழங்கிய பொதுநலவாய மாநாடு தொடர்பான செய்தி சேகரிப்பிற்காக வரும் ஊடகவியலாளர் பட்டியலில் மக்ரேவின் பெயரும் இருந்ததால் இலங்கை அதிகாரிகளுக்கு மறுக்க முடியாத இக்கட்டான நிலைமை ஏற்பட்டது.
இந்த நிலைமையில் கெலும் மக்ரே இலங்கை வருவதற்கு வீசா வழங்குவதை தவிர மாற்று வழியில்லை என்ற காரணத்தினால் அரசாங்கத்தினால் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடத்தப்படுவது தொடர்பில் தான் மிகவும் கவலையடைவதாக மக்ரே பிரித்தானிய ஊடகங்களிடம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலங்கை பொதுநலவாயத்தின் தலைவர் பதவியை வகிக்க உள்ளது.
மனித உரிமை, நியாயம் மற்றும் சட்டம் தொடர்பில் வழிகாட்டும் விடயங்கள் சம்பந்தமாக பொதுநலவாயத்தின் பொறுப்புகள் குறித்து அழுத்தங்களை கொடுக்கும் பொறுப்புகளுக்கு இலங்கை தலைமையேற்க உள்ளமை தொடர்பில் அவர் விசனம் வெளியிட்டிருந்தார்.

ad

ad