புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2013

முல்லைத்தீவில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், நேற்று மாலை 6.05 மணியளவில் ஈகைச்சுடரேற்றி மாவீர்களுக்கு வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் தங்கள் உறவுகளை இழந்த பொது மக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.


மறவர்கள் சிந்திய ரத்தம் எங்கள் கடல் நீரில் கலந்தே இருக்கிறது. அந்த நீரைப் பருகுகிற மீன்களைத் தான் எம் மக்கள் உண்கிறார்கள். அவர்களின் உடல்கள் எம் மண்ணுடன் கலந்து விதையாயிருக்கின்றன. அங்கே முளைக்கும் தாவரங்களைத்தான் நாம் உண்கிறோம். அவர்களின் எண்ண அலைகள் இன்றும் எம் பிரபஞ்சத்திலே நிறைந்தே இருக்கின்றன. அவற்றைத்தான் எம் மக்களின் எண்ணங்கள் ஈர்க்கின்றன. இப்படிக் காற்றிலும் கடலிலும் விண்ணிலும் நிறைந்து, உணவிலும் நீரிலும் எண்ணத்திலும் எம்மக்களோடும் எம் மண்ணோடும் இரண்டறக்கலந்த மாவீரர்களை எம்மிடம் இருந்து எப்படிப் பிரிப்பது?

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது, உலகின் அடிப்படை மனித நாகரீகம். அந்த பொது நாகரீகத்தையே எம் மக்கள் இன்று நிலை நிறுத்தியிருக்கிறார்கள். இனியும் நிலை நிறுத்துவார்கள் என்றார்.

து.ரவிகரன்,
வடமாகாணசபை உறுப்பினர்
முல்லைத்தீவு மாவட்டம்.

ad

ad