புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2013

வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் நீதிமன்றத்தில் சரண்
உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக எம்.எல்.ஏ. வீடு தாக்கப்பட்ட வழக்கில் வீரபாண்டி ஆறு முகத்தின் மகள் மகேஸ்வரி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், சேலம் நீதிமன்றத்தில் வியாழக் கிழமை சரணடைந்தனர்.



 கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் வீரபாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.கே.செல்வத்தின் வீடு கற்கள் வீசி தாக்கப்பட்டது. இது குறித்து விசாரித்த கொண்டலாம்பட்டி போலீஸார், மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் மகேஸ்வரி, தம்பி மகன் உமா சங்கர், இவரது மனைவி இந்திராணி, பாரப்பட்டி குமார், சோலைகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
 இந்த வழக்கில் சேலம் போலீஸார் கைது செய்யாமல் இருக்க அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளனர். இந்த நிலையில் மகேஸ்வரி, உமாசங்கர், இந்திராணி, குமார் ஆகியோர் சேலம் 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
 குமார், உமாசங்கர் ஆகியோர் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் 3 வாரங்களுக்கு தினசரி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப் பட்டது.

ad

ad