புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2013

ரொறன்ரோவில் செவ்வாய்க்கிழமை 10 சென்ரிமீற்றர் உயரத்திற்குப் பனிப் பொழிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என எதிர்பார்க்கப்படுகின்றது. 
குறிப்பாக இன்று காலையில் இந் நிகழ்வு எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை வீதிப் போக்குவரத்து மிகவும் கடினமடையலாம் எனவும் இவற்றைக் கருத்தில் கொண்டு வாகன ஓட்டுனர்கள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்தும்படி பொலிசார்
மக்களை அறிவுறுத்துகின்றனர்.
கனடியக் காலநிலை அவதான நிலையமும் ஒரு விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒன்றரரியோவின் ஏரிப்பிரதேசத்திற்கு அண்மையில் அதிகளவு பனிப்பொழிவு நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏரிதவிர நாட்டின் உள்பகுதிகளில் பனிப்பொழிவு ஏரிக்கண்மையிலும் பார்க்கக் குறைவாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
car crashDsnow 2 snow 3
ரொறன்ரோ டவுண்ரவுணில் செவ்வாய் அதிகாலையில் தீயணைப்புக் குழாய் ஒன்றின்மீது கார் மோதியதில் King /d Jarvis போன்ற பகுதிகளில் வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளதென கனடிய செய்தி நிறுவனமான சிபி 24 தெரிவித்திருக்கின்றது.
கனடிய வானிலை அவதான நிலையமானது வாகன ஓட்டுனர்களுக்கு (poor visibility) பார்ப்பதற்கான தூரத்தின் அளவு மிகவும் குறைவாகவே இன்று காணப்படும் எனவும் அத்துடன் பனி வீதிகளில் குமிந்து கொண்டிருக்கும் எனவும், சில பகுதிகளில் அவை துப்பரவு செய்யப்படாத நிலையிலும் இருக்கின்றன என எச்சரிக்கை விடுத்துள்ளது.
snow 4 snow 5
வாகன ஓட்டுனர்கள் மிக மிக அவதானமாகவும், மெதுவாகவும், அத்துடன் வாகனங்களுக்கிடையிலான இடைவெளியின் அளவினை அதிகரி;க்கும்படியும், குறிப்பி;ட்ட நேரத்திற்கு முன்னதாகவே பயணத்தை ஆரம்பிக்கும்படியும் பொலிசார் வாகனச் சாரதிகளுக்குத் தெரிவிக்கின்றார்கள்.
விமானமார்;க்கமாக செல்வோர் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு தனது பயணத்தின் நேரத்தை உறுதி செய்தபின்பு விமான நிலையத்திற்குச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
இவைகளுக்கு மேலாக அதிகளவு குளிர் நிலவுகின்ற நிலையும் இன்னும் தணியவில்லை என ரொறன்ரோப் பொது சுகாதாரப் பிரிவு வெளியிட்டுள்ளது.
மேலும் ரொறன்ரோவில் மாலையளவில் அதிக வேகமான காற்று வீசுவதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கிழமை முடிவில் வெப்பம் சிறிது அதிகரிப்பதற்கும் எனவம் அதனால் மழை ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ad

ad