புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2014

வன்னி இறுதிப் போர் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் தவறானவை!– வன்னி மருத்துவத் தலைமையதிகாரி
மன்னார் மாவட்ட கத்தோலிக்க ஆண்டகை இராயப்பு யோசப்பின் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சனல் 4 நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்களை மறுதலிக்குமுகமான செய்திகளை வெளியிட்டு வரும் இலங்கை அரசு இது தொடர்பான இன்னொரு தகவலை வெளியிட்டுள்ளது.
இறுதிப் போரின் போது வன்னிப் பிராந்திய மருத்துவ சேவைகளிற்கான தலைமை அதிகாரியாக இருந்த டாக்டர் வீரகத்திப்பிள்ளை சண்முகராஜா அவர்களின் சத்தியக்கடதாசியை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
வெள்ள முள்ளிவாய்க்கால் வரை தங்களின் சேவையைத் தொடர்ந்தாகக் கூறும் இந்த வைத்திய அதிகாரியின் கூற்றுப்படி கடைசிப் போரில் 5,000 வரையானவர்களே பலியானதாகத் தெரிவித்துள்ளார்.
வன்னிக்கான அபாய மருத்துவ சேவைப் பிரிவினராகிய தாம் மக்கள் இடம்பெயர்ந்து செல்லுமிடமெல்லாம் சென்றதாகவும் தங்களது வைத்திய சேவைகளிற்காக தனது நிர்வாகத்தின் கீழே பத்து வைத்தியர்கள் மற்றும் பதினைந்துக்கு மேற்பட்ட தாதியர்கள் பணியாற்றியதாகச் சொல்லும் மேற்படி வைத்திய அதிகாரி,
ஒரு செல்வீச்சுல் 34 பேரே பலியானதாகவும் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுத் தொடர்புகளிற்கான தளபதி அந்தத் தொகையை ஊடகங்களிற்கு 534 ஆகச் சொல்லுமாறு தனக்குக் கூறியதாகவும் விடுதலைப் புலிகளின் தளபதிகளின் சொல்லைக் கேட்காவிட்டால் தான் தண்டிக்கப்படுவேன் என்பதால் தான் அந்தப் பொய்யைச் சொன்னதாகவும் மேற்படி வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளதோடு,
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, வெள்ள முள்ளிவாய்க்கால் ஆகிய வைத்தியசாலைகளில் செல்கள் விழுந்தது உண்மையே என்றும், ஒரு சிலரே இதில் பலியானர்கள் என்றும் தெரிவித்துள்ளதோடு, இந்த வைத்தியசாலைகளிற்கு மிக நெருக்கமாக விடுதலைப் புலிகள் தங்களது செல் செலுத்தும் நிலைகளை வைத்திருந்தது உண்மையே என்றும் அதனை அகற்றுமாறு தாங்கள் விடுதலைப் புலிகளைக் கேட்டபோதும் எந்தப் பலனுமில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
2008ம் ஆண்டு முதல் மருந்துக்களை வைத்திருப்பதற்காக தாங்கள் 30 குளிரூட்டிகளை வைத்திருந்ததாகவும், 2009ம் ஆண்டு மார்ச் மாதமளவில் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளால் இந்தக் குளிர்சாதனப் பெட்டிகளின் தொகை 14 ஆகக் குறைந்ததாகவும் குறிப்பிடும் மேற்படி வைத்திய அதிகாரி,
வாணி குமார் என்ற சனல்-4 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டியளித்த பெண் தங்களிற்குத் தொண்டராகப் பணிபுரிவதற்காக விடுதலைப் புலிகளினால் 2009ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதியளவில் இணைக்கப்பட்டவர் என்றும், அவருக்கு எந்தவொரு மருத்துவ முன்னனுபவமோ, தகுதியோ இல்லையென்றும் என்றும் அவர் சனல்-4 நிகழ்ச்சிகளில் கூறியவை பொய்யானவையென்றும், தான் எப்போதுமே மயக்க மருந்து கொடுக்காமல் யாருக்கும், குறிப்பாக பாலகர்களிற்கு அறுவைச் சிகிச்சை செய்யவில்லையென்றும்,
அதேபோன்று சத்திரசிகிச்சைகளிற்காக சமையலறைக் கத்திகளைப் பாவித்ததாக வாணி குமார் சனல்-4ல் கூறியிருப்பது முற்றும் பொய்யென்றும் தங்களிடம் ஆயிரக்கணக்கான அறுவைச் சிகிச்சைக்கு உபயோகிக்கும் நுண்ணிய கத்திகள் (பிளேட்கள்)  இருந்தனவென்றும் தெரிவித்துள்ளார்.

ad

ad