புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2014

இராணுவ அதிகாரிகளிடமே எனது கணவரை ஒப்படைத்தேன்!– ஆணைக்குழு முன் அனந்தி சாட்சியம்
போரின் இறுதியில், சீருடையில் இருந்த இராணுவ உயர் அதிகாரிகளிடமே தனது கணவனான விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனை ஒப்படைத்ததாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
காணாமற் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று திங்கட்கிழமை சாட்சியமளித்துள்ளார்.
தமது கணவர் காணாமற்போனமை தொடர்பில் அவர் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இன்று சென்ற அனந்தி சசிதரன் ஆணைக்குழுவின் விசாரணைகளில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
காணாமற் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் நடவடிக்கை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொன்நகர், பாரதிபுரம் மற்றும் மலையாளபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் காணாமற்போனவர்கள் தொடர்பில் அவர்களது உறவினர்கள் இன்று சாட்சியமளித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு தினங்களாக கிளிநொச்சியைச் சேர்ந்த 129 முறைப்பாட்டாளர்களின் வாக்குமூலங்களை ஆணைக்குழு பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவர்களிடம் தலா 25 நிமிடங்கள் தொடக்கம் 35 நிமிடங்கள் வரை விசாரணைகள் நடத்தப்பட்டு தகவல்கள் பதிவு செய்யப்பட்டதாக காணாமற்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும், சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் முறைப்பாட்டாளர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமற்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நாளையும் கூடவுள்ளது
காணாமற்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே சுமார் 13,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார்.
இராணுவ அதிகாரிகளிடமே எனது கணவரை ஒப்படைத்தேன் – ஆணைக்குழு முன் அனந்தி சாட்சியம்.
போரின் இறுதிக்கட்டத்தில், சீருடையில் இருந்த இராணுவ உயர் அதிகாரிகளிடமே, தனது கணவனான விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனை ஒப்படைத்ததாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
காணாமற் போனோரைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக இன்று சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று நடந்த விசாரணை அமர்வில் சாட்சியமளித்த அனந்தி சசிதரன்,
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் நானும், எனது கணவன் மற்றும் பிள்ளைகளும் படையினரிடம் சரணடைந்தோம்.
அதையடுத்து, என்னையும் எனது பிள்ளைகளையும் தனியாகப் பிரித்து வவுனியாவுக்குக் கொண்டு சென்ற படையினர், எனது கணவனை விசாரணை செய்து விட்டு விடுதலை செய்வதாக தெரிவித்திருந்தனர்.
நானும் பிள்ளைகளும் செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமில் வலயம் 4ல் தங்கவைக்கப்பட்டோம்.
எனது கணவரின் நிலை பற்றி இதுவரையில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இறுதியாக 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் எனது கணவரை ரயிலில் கொண்டு செல்வதைக் கண்டதாக உறவினர் ஒருவர் எனக்கு தெரிவித்தார்.
அதன் பிறகு என் கணவரைப் பற்றிய எவ்வித தகவல்களும் இல்லை.
நான் எனது கணவரை சிறிலங்கா படையினரிடம் ஒப்படைத்தபோது பூவும் பொட்டுடனும் சுமங்கலியாகவே இருந்தேன். அதேபோல் இன்றும் நான் அப்படியே இருக்கின்றேன். இனியும் நான் இப்படியே தான் இருப்பேன் என்றார் .
கேள்வி - உங்கள் கணவர் எவ்வளவு காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார்?
பதில் - நான் அவரைத் திருமணம் செய்வதற்கு முன்னர் இருந்தே அவர் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். நான் அவரை 1998ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் திகதி திருமணம் செய்தேன்.
கேள்வி - உங்கள் கணவரை ஒப்படைத்த இராணுவ அதிகாரியை அடையாளப்படுத்த முடியுமா?
பதில் - 'நான் எனது கணவனை ஒப்படைத்து 4 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய தினம் நான் அவரை ஒப்படைக்கும் போது யுத்தத்தின் அகோரத்தினால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன்.
இதனால் இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தேன் என்பதை அவர்களின் உடைகளிலிருந்த சின்னங்கள் மூலம் உணரமுடிகிறதே தவிர அவர்களை என்னால் அடையாளப்படுத்த முடியாது.
காணாமற்போனோர் விடயத்தில் உள்நாட்டிலே தீர்வு காணப்பட வேண்டும்.
அதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் மனம்மாற வேண்டும்.
இதற்கு முன்னர் காணாமற்போனோருக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் எந்தப் பயனும் கிட்டவில்லை.
இந்த ஆணைக்குழுவினால் காணாமற்போனோர் தொடர்பாக தீர்வு கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம - சுதந்திரமான விசாரணைகளுக்கு வழி ஏற்படுத்தப்படுவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதியான முறையில் இந்த ஆணைக்குழுவினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

ad

ad