மதுரை வரும் கருணாநிதியை தாம், தந்தை என்ற முறையில் சந்தித்தால் அவரையும் கட்சியை விட்டு நீக்கிவிடுவார்கள் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
தி.மு.க.வின் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி சமீபத்தில் தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர்
ஆதரவாளர்கள் கூட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறார்.தி.மு.க.வின் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி சமீபத்தில் தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர்
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் கட்சி பற்றி தெரியாதவர்கள். பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளதாக கூறி வரும் மு.க.அழகிரி, அந்த வேட்பாளர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசி வருகிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வருகின்ற 13 ஆம் தேதி, மதுரை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதே நாளில் மு.க.அழகிரி நெல்லையில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார். இது, மதுரை வரும் கருணாநிதியை சந்திப்பதை தவிர்ப்பதற்காக மு.க.அழகிரி செய்துள்ள ஏற்பாடு என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மு.க.அழகிரி கூறும்போது, ''தி.மு.க.வில் தொண்டர்களுக்கு தற்போது மரியாதை இல்லை. கட்சி பெயர் கூட தெரியாத பலருக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தலைவர் கலைஞருக்கு தெரியாமல் நடந்துள்ளது. கலைஞரை சுற்றியுள்ள சுயநலவாதிகள் கட்சியையும், தொண்டர்களையும் அவமரியாதை செய்து வருகிறார்கள்.
தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்கு விளக்கம் கேட்டு என்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டனர். மேலும், பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னுடன் யார் தொடர்பு வைத்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
தந்தை என்ற முறையில் கருணாநிதியை நான் சந்தித்தால் அவரையும் கட்சியை விட்டு நீக்கி விடுவார்கள். எனவே கலைஞரை சந்திக்கும் எண்ணம் எனக்கு இல்லை. வருகிற 12, 13 ஆகிய 2 நாட்கள் நெல்லையில் எனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளேன்" என்றார்.