புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2014

2016 இல் சுவிசில் தமிழ் விளையாட்டுக் கழகம் லீக் போட்டிகளில் ஈடுபட உள்ளது 
சுவிசின் உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு  செய்து  முறைப்படி  லீக் ஆட்டங்களில் பங்கேற்றக என புதிய கழகம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் சிலர்  ஈடுபட்டுள்ளனர்.
இந்த முயற்சிக்கு தமிழரிடையே பலத்த ஆதரவும் பெருகி வருகிறது .இதற்கான  நிதி வளத்தினை தமிழ் மக்களை அங்கத்தவர்களாக சேர்ப்பதன் மூலம் பெறுவதற்கான  திட்டம் ஒன்றும் முன்வைக்கபட்டுள்ளது .எமக்கென இந்த நாடில் ஒரு கழகத்தை உருவாக்கி எமது இளம் தலைமுறையினை ஊக்குவித்து சர்வதேச மட்டத்தில் வளர்த்தெடுப்பற்கான இந்த பாரிய செயல்பாட்டுக்கு உங்களை ஆதரவுக் கரம் நீட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம் மேலும் பலரது ஆதரவை வேண்டி இந்த கழகம் விடுத்துள்ள அறிக்கை இதோ
UNITED TAMIL FOOTBALL CLUB - BERN
அனைத்து தமிழ் உறவுகளிற்கும் எமது அன்பான வேண்டுகோள்.
தற்போது அனைவரும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளை பார்த்துக் கொண்டிருப்பீர்கள். குறிப்பாக சுவிஸ் அணி மிகவும் சிறப்பாக ஆடிவருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். சுவிஸ் அணியில் பல வெளிநாட்டவர்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆனால் நாம் தமிழர்கள் பல்லாண்டுகாலம் வாழ்ந்தும் எம்மவர் எவரும் சுவிஸ் அணியில் இல்லாதது எமக்கு மிகவும் வேதனையளிக்கிறது. ஆனால் மறுபக்கம் உதைபந்தாட்டத்தை பொறுத்தவரை எவ்வகையான ஊக்குவிப்புக்களை நாம் எம் இனத்திற்கு செய்துள்ளோம். ஆகவே இதனை கருத்திற்கொண்டு தமிழ் இளைய சமுதாயத்தின் வளர்ச்சியை உதைபந்தாட்டத்தில் இணைப்பதற்கான முயற்சிகளை எமது கழகம் ஆரம்பித்துள்ளது. அதாவது சுவிஸ் லீகாவில் இணைந்து விளையாடத் தீர்மானித்துள்ளோம்.
ஆகவே ஆர்வமுள்ள சிறுவர்கள், இளைஞர்கள் எம்முடன் தொடர்புகொண்டு எமது முற்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
2016 / 2017 உதைப்ந்தாட்ட தொடக்கமாக எமது கழகம் இயங்கவுள்ளது. கீழ்வரும் தொலைபேசி எண்களுடன் தொடர்புகொண்டு எம்முடன் இணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
Jayakkumar 079 - 3825599
Mano 079 - 1973532
Piraba 076 - 5409541
Jeyakumar 079 - 7303428
கடித மூலமாக தொடர்புகொள்ள
R.Jayakkumar
Bundkofen 498
3054 Schupfen
நன்றி
UTFC BERN

ad

ad