1 ஜூலை, 2014

அரசியல் தீர்வுக்கு ஆலோசனை வழங்குங்கள்; மேலும் 2வாரங்கள் நீடிப்பு 
அரசியல் தீர்வு தொடர்பில் மக்கள் ஆலோசனையினை பெறுவதற்கான காலம்  இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு தொடர்பில் மக்களது ஆலோசனையினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த யூன் மாதம் 6ஆம் திகதி அறிவித்திருந்தது.

அதன்படி அறிவிக்கப்பட்ட ஆலோசனைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையினால் மேலும் 2 வாரங்களுக்கு காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எனவே ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கின்றோம் என்றும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.