புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2014

போர்க் கால எச்சங்கள் அழிக்கப்பட்டுள்ளன ; முதலமைச்சர் 
 வெகு விரைவில் பொருளாதார ரீதியாகப் பல பின்னடைவுகளை உலகத்தின் உயர்நிலை நாடுகள், வல்லரசுகள் ஆகியன எதிர்நோக்கவுள்ளன என்று எதிர்வுகள் கூறுகின்றன
. வருங்காலம் எத்தகையதாக அமையும் என்பதைக் கூறமுடியாது என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.





 
நேற்று வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்,
  
 
மேலும் அவர் தனது உரையில்,
 
அதனால் நாங்கள் எமது மத ரீதியான, அற ரீதியான, மனிதாபிமான ரீதியான பின்னணியைப் பேணிக் கொண்டு தொழில்நுட்ப ரீதியாக முன்னேறுவதே உசிதம் என்று நினைக்கின்றேன். 
 
போர்க் காலத்தில் தொழில்நுட்பத் திறனோடு எங்கள் இளைஞர் யுவதிகளால் கட்டப்பட்டிருந்த பலதையும் இன்று நாம் 
அழித்து விட்டுள்ளோம். அத்தனை தொழிற்திறனும் தொழில் வல்லமையும், பொறுமையும் சேர்ந்து உருவாக்கிய இந்த இயல்பியல் அதிசயங்கள் கண்காணாமற் போயுள்ளன. இதைத்தான் நான் இங்கு கூற வருகின்றேன். 
 
அதாவது மனிதனின் ஆற்றலானது ஆக்க பூர்வமாகவும், அழிவு பூர்வமாகவும் செயற்படுவதாலேயே இவையெல்லாம் நடக்கின்றன.
 
ஆகவே எமது அறநெறியில் ஸ்திரமாக இருந்து கொண்டு ஆன்மீக அறிவுரைகளில் திளைத்துக் கொண்டு அதே நேரம் தொழிற்துறைகளில், தொழில்நுட்பங்களில் மேம்பாட்டைக் காணுவோமாக என தெரிவித்தார்.

ad

ad