1 ஜூலை, 2014

கொலைவெறி கொண்டு தாக்கப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் 
ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப் போர் மீது இனம் தெரியாத ஆயுததாரிகளால் நேற்று இரவு 7.00 மணியளவில் கொலை வெறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
கல்விச்செயற்பாடுகளை முடித்து கொண்டு மாணவர்கள் விடுதிக்குச் சென்றுகொண்டிருக்கும் போது அவர்கள் சென்ற பேருந்தை வழிமறித்த ஆயுதம் தரித்த குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
குறித்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த  மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான அனைவரும் மாணவத் தலைவர்கள் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் நஜித் இந்திக்க தெரிவித்தார்.