புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2014


ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

உபவேந்தர், விரிவுரையாளர்களை பணயம் வைத்தது ஒரு வகை பயங்கரவாதமே - மானியங்கள் ஆணைக்குழு தலைவி


ரஜரட்ட பல்கலைக் கழகத்திற்குள் மாணவர்களால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து விரிவு ரையாளர்கள் இன்று (30) முதல் நிர்வாக சேவை மற்றும் கல்வி செயற்பாடுக ளிலிருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

பல்கலைக் கழக உபவேந்தர் மற்றும் சில விரிவுரையாளர்கள் மாணவர்களினால் சுமார் 23 மணித்தியாலங்களுக்கும் மேலாக பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை தற்காலிக மாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் முகாமைத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் வழமைக்கு திரும்புமென அறிவிக்கப் பட்டிருந்த நிலையிலேயே. விரிவு ரையாளர்கள் நிர்வாக மற்றும் கல்வி செயற்பாடுகளிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவிப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை, பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் விரிவுரையாளர்களுடன் மூர்க்கத்தனமாக நடந்துகொண்ட மாணவர்கள் மற்றும் ஏனையோர் மீது. நாட்டினதும் பல்கலைக்கழகத்தினதும் சட்ட திட்டத்திற்கமைய கடுமையான தண்டனை வழங்க வேண்டியது அவசியமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் ஷானிக்கா ஹிரிபுரேகம தினகரனுக்குத் தெரிவித்தார்.
சிறு குழுவினரே இதன் பின்னணியிலிருந்து செயற்படுகின்றனர். ஏனைய மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டு பலவந்தமாக இதில் உள்வாங்கப் பட்டுள்ளனர். இதனை ஒரு வகையான பயங்கரவாதச் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். இவ்வாறானதொரு நிலைமை இனிமேலும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இடம் பெறாமல் இருக்க வேண்டுமாயின் மேற்படி செயலில் ஈடுபட்ட மாணவர் களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.
குறித்த மாணவர்கள் ஏற்கனவே குற்றம் இழைத்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கல்வி மற்றும் பல்கலைக்கழக செயற்பாடு களிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்கள். இந்நிலையில் இவர்கள் மீண்டும் உபவேந்தர் மற்றும் சிறைக் கைதிகளை பயணம் வைத்துள்ளமை மேலும் தமது குற்றச் செயல்களை அதிகரித்துக் கொண்டுள்ளனர். இம்மாணவர்களுக்கெதிராக எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் குறித்து பல்கலைக்கழக மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 28 மாணவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்ட தற்காலிக இடை நிறுத்தத்தை ரத்துச் செய்யக் கோரி பல்கலைக்கழகத்தின் சுமார் ஆயிரம் மாணவர்கள். உபவேந்தர் பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தன மற்றும் சில விரிவுரையாளர்களை 23 மணித்தியாலங்களுக்கு பணயக் கைதிகளாக வைத்திருந்தனர்.
இச்சம்பவம் கடந்த 25 ஆம் திகதி மாலை 3 மணியளவில் ஆரம்பமானது. உபவேந்தரும் விரிவுரையாளர்களும் மாணவர்கள் கேட்டுக்கொண்ட ஆறு உடன்படிக்கைகளுக்கு இணக்கம் தெரிவி த்ததையடுத்து விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad