புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூன், 2014

எமது நிலமே எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு ; கோப்பாயில் மக்கள் ஆர்ப்பரிப்பு 
 வளலாய் மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீளக்குடியேற்றுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் கவனயீர்ப்பு போராட்டம் காலை 8 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

 
 
இந்த கண்டன போராட்டத்தை குழப்பும் வகையில் மக்களுக்கு பல அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும், போராட்டத்தில் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
 
 
எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு, அரச பயங்கரவாதம் எமக்கு வேண்டாம் அரசே இராணுவத்தை வெளியேற்று, தமிழர் நிலங்களில் ஆக்கிரமிப்பு இராணுவ முகாம்கள் தமிழர் வயல்களில் இராணுவ பயிர்ச்செய்கை, அரசே தமிழர்களுக்கு நீ காட்டுவது சுடுகாடா போன்ற சுலோகங்களை தாங்கிய வாறும் கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
இந்த போராட்டத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிதரன், வட மாகாண அமைச்சர்களான கல்வி அமைச்சர் குருகுலராஜா, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வட மாகாண சபையின் அவைத் தலைவர் சிவஞானம்,  சபை உறுப்பினர்களான கஜதீபன், சர்வேஸ்வரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதிநிதி பாஸ்கரா, பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=344353125016512518#sthash.OuK09N9F.dpuf

ad

ad