புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூலை, 2014

34 ஆவது மாநாட்டில் 14 தீர்மானங்கள் 
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

அவையாவன
 
1) வடக்கு, கிழக்கில் கடந்த 5 வருடகாலமாக பெருமளவில் கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அரச படைகளாலும் சிங்கள இனவாத சக்திகளாலும் இடித்தழிக்கப்பட்டுவருகின்றமையை நாம் வன்மையாக 
கண்டிக்கின்றோம். 
 
2)மக்கள் தமது சொந்த இடங்களில் இன்னும் பூரணமாக குடியேற்றப்படவில்லை. ஐ.நாவின் உள்ளக இடம்பெயர்ந்தோர் வழிகாட்டி நெறியின் அடிப்படையில் செயலாளர் நாயகத்தினதும் இலங்கை ஜனாதிபதியினதும் கூட்டு அறிக்கைக்கு இணங்க இம்மீள்குடியேற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ஊக்கப்படுத்தவும் ஐ.நா செயலாளர் நாயகம் ஓர் பிரத்தியேக அதிகாரியை நியமிக்க வேண்டும்.
 
3)பொது மக்களின் காணிகளை விட்டு வெளியேற்றவேண்டும் அப்போதுதான் தமிழ் மக்கள் தனது சொந்த நிலங்களில் நின்மதியாக வாழமுடியும்.
 
4)தனியாருடைய தோப்புக்கள், தோட்டங்கள் போன்றவற்றை அதன் உரிமையாளரிடம் கையளிப்பதுடன் ஏனைய பண்ணைகளை வடக்கு மாகாண சபையிடம் கையளிக்க வேண்டும்.
 
5) வலி.வடக்கு முந்தையன்கட்டு ஆகிய பகுதிகளில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நூற்றக்கணக்கான மாடுகளை இராணுவம் தமது தேவைகளுக்காக பயன்படுத்துகின்றது.இதனால் பொதுமக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து அல்லல் படுகின்றனர். எனவே மாடுகளை உரியவர்களிடம் இராணுவத்தினர் ஒப்படைக்க வேண்டும்.
 
6)வடக்கில் ஒரு லட்சத்துக்கு மேல் ஆயுதப்படையினர் நிலைகொண்டிருப்பதால் நிர்வாகத்தின் சகல மட்டங்களிலும் தலையீடு செய்தல், ஜனநாயக ரீதியாக போராட்டத்தில் ஈடுபடுவோரை மிரட்டுவதுமான நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகின்றது. எனவே வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்றவேண்டும்.
 
7)வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்து 8 மாதங்களாகியும் மாகாணசபைக்கான அதிகாரங்களை செயற்படுத்தவிடாது தடுக்கும் ஆளுநர் மற்றும் அரசின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக மாகாணசபை இயங்க வேண்டும்.
 
8)இனப்படுகொலையைச் செய்த ஓர் அரசாங்கம் மக்களை நாட்டை விட்டு விரட்டுவதனூடாக தொடர்ச்சியான இன அழிப்பில் ஈடுபட்டு வருகின்றது. எனவே இவ்வாறான  தமிழ் இனவழிப்பு நடவடிக்கைகளை இவ் அரசு கைவிட வேண்டும்.
 
9)இலங்கை அரசாங்கத்தின் இன அழிப்பில் இருந்து தமிழர்களை காப்பாற்ற வேண்டுமாயின் தமிழ் மக்களும்இ சிங்கள மக்களும் மொழி, கலாசாரம், பண்பாடு என்பனவற்றில் தனித்துவமான பண்பகளைக் கொண்டவர்கள் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் இறையாண்மை மற்றும் தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை என்பதன் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.
 
ஆகிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

ad

ad