புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2014



ஹபீஸ் சயீத் - ராம்தேவ் நண்பர் சந்திப்பு விவகாரம்: மாநிலங்களவையில் அமளி
ஹபீஸ் சயீதை சந்தித்து ஏன்? ராம்தேவ் உதவியாளர் விளக்கம்
மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் திங்கள்கிழமை அமளியில் ஈடுபட்டனர். பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை, பாபா ராம்தேவ் நண்பர் வைதிக் சந்தித்தாக குற்றம் சாட்டினர். ஹபீஸ் சயீத்தை வைதிக் சந்தித்தது குறித்து அரசு விளக்கம் தர வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. காங்கிரஸ் உறுப்பினர்களின் இந்த அமளியால் மாநிலங்களவை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. 

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவராக கூறப்படும் ஹபீஸ் சயீத்தை, பாபா ராம்தேவ் உதவியாளர் வேதபிரதாப் வைத்தி அண்மையில் பாகிஸ்தானில் சந்தித்து பேசியது குறித்து அரசு விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. 

காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா பேசுகையில், இந்த சந்திப்பு அரசின் உதவியின்றி நடந்திருக்க முடியாது. நிச்சயமாக, அரசு இதற்கு உதவி செய்திருக்கக் கூடும். அதிகாரிகள் உதவியிருப்பார்கள். இந்த சந்திப்பு குறித்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதருக்கு தெரியுமா? அவர்கள் வெளியுறவுத்துறைக்கு தகவல் அளித்திருக்கிறார்களா? அப்படி அளித்திருந்தால், வெளியுறவு அமைச்சகம் இதுபற்றி அறிக்கை அளிக்க வேண்டும். ஏனெனில் இந்த சந்திப்பு நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்றார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வேதபிரசாப் வைத்தி, நான் கடந்த 45 ஆண்டுகளாக தென்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளின் பிரதமர், அதிபர் மற்றும் பல்வேறு தரப்பினரை சந்தித்து வருகிறேன். என்னிடம் உள்ள கருத்துக்களைத் தான், நல்லெண்ண விரும்பியாக அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். யாருடைய பிரதிநிதியாகவும்நான் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை. அப்படி விரும்பியிருந்தால் இந்திராகாந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய் ஆகியோரின் பிரதிநிதியாக நான் இருந்திருக்கலாம். நரேந்திர மோடியின் பிரதிநிதியாக நான் செயல்படவில்லை என்றார்.

ad

ad