பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான சுற்றில் யாழ் பல்கலைக்கழகம் சம்பியன் ஆனது
போட்டி ஆரம்பமாகிய சில நிமிடத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வீரர் ஞானரூபன் தனது அணிக்கான முதலாவது கோலை பெற்று எதிரணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்நிலையில் போட்டி மிகவும் விறுவிறுப்படைந்தாலும் யாழ்ப்பாணம் பல் கலைக்கழக அணி வீராகள் எதிரணியை கலங்கடிக்கும் வகையில் தமது ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு சளைக்காது தென்கிழக்கு பல் கலைக்கழக அணி எதிர்த்து விளையாடிய போதிலும் மீண்டும் ஒரு கோலை ஞானரூபன் பெற்றுக்கொண்டார்.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழ வீராகள் தொடர்ந்து எதிரணியினரின கோல் பரப்பை ஆக்கிரமித்த போதிலும் கோல்கள் எதனையும் பெறமுடியாதவாறு எதிரணியினர் தடுத்து விளையாடினர். இந்த நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாமல் ஆட்டம் முடிவடைந்தது. ஆட்ட நிறைவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணி 2:0 என்ற கோல் கணக்கில் தென்கிழக்கு பல்கலைக்கழக அணியை வெற்றி பெற்று தேசிய மட்டத்தில் பல்கலைக்கழக சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது. போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் ஆட்டநாயகனாகவும் யாழ்ப்பாணம் பல் கலைக்கழக அணி வீரன் ஞானரூபன் தெரிவு செய்யப்பட்டார்.