புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2014

தேர்தல் நிதியாக ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான பெரிய தொகையாக தி.மு.க. ரூ.1.04 கோடி,
 தேர்தல் நிதியாக ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான பெரிய தொகையாக தி.மு.க. ரூ.1.04 கோடியும், அ.தி.மு.க. ரூ.1.03 கோடியும்
வசூல் செய்துள்ளதாக தலைமை தேர்தல் கமிஷனிடம் கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தனிநபர்களிடமும், பிரபல தொழில் மற்றும் வணிக நிறுவனங்களிடமும் இருந்து பெரிய அளவிலான நன்கொடைகள் பெற்று வருகின்றன. இதுபோன்று திரட்டப்படும் தேர்தல் நிதி குறித்து வெளிப்படையாக அரசியல் கட்சிகள் அறிவிக்க வேண்டும் என்பது உள்பட 10 யோசனைகளை தலைமை தேர்தல் கமிஷன் கடந்த ஆண்டில் கூறியிருந்தது.

அதன் அடிப்படையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்திய தேர்தல் கமிஷன், ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை வழங்குகிறவர்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என்றும், ஆண்டுதோறும் பெற்ற நன்கொடைகள் தொடர்பாக இந்திய தேர்தல் கமிஷனிடம் கணக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த (2013-14) நிதியாண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் தொடர்பான கணக்குகளை சமர்ப்பிக்க கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதியை கடைசி நாளாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. அதன்படி தலைமை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்கப்பட்ட கணக்குகளின்படி, 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக அளிக்கப்பட்ட நன்கொடைகளாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி 66 கோடியே 47 லட்சத்து 22 ஆயிரத்து 228 ரூபாயை பெற்றுள்ளது.

மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சுமார் ரூ.1.40 கோடியும், உத்தரப்பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சி ரூ.1.69 கோடியும் பெற்றுள்ளது. இவற்றில் தலா 25 லட்சம் ரூபாய்க்கான 6 காசோலைகளை (ஒன்றரை கோடி ரூபாய்) கொல்கத்தாவை சேர்ந்த ஒரே பெண் தொழிலதிபர் சமாஜ்வாதி கட்சிக்கு நன்கொடையாக அளித்துள்ளார். மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, தங்களுக்கு எவ்வித நன்கொடையும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகளான தி.மு.க. ரூ.1.04 கோடியும், அ.தி.மு.க. ரூ.1.03 கோடியும் நன்கொடையாக பெற்றுள்ளன. ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான பெரிய தொகையாக ரூ.1.04 கோடிக்கு உட்பட்ட தொகையை மட்டுமே பெற்றுள்ளதாக கணக்கு காட்டியுள்ள தி.மு.க., மேலும் இதர சிறிய தொகையையும் சேர்த்து 79.85 கோடி ரூபாயை கடந்த நிதியாண்டில் நன்கொடையாக பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இறுதிக்கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க., மாநில கட்சிகளான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, ஐக்கிய ஜனதா தளம், உள்ளிட்ட சில கட்சிகள் இன்னும் கணக்குகளை தாக்கல் செய்யவில்லை

ad

ad